டிராமா - விமர்சனம்

காவல் நிலையத்தில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்கிறார்  ஜெய் பாலா அந்த  காவல் நிலையத்தில் பணிபுரியம் அனைவரும் நேர்மையாக இருக்குமாறு உத்தரவிடுகிறார்.  ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு  கேட்டு  காவல் நிலையம் வருகிறது  இந்த ஜோடிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் ஜெய் பாலா இந்த சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் காதலி  காவ்யா  தனது பிறந்தநாளை காவல்நிலைத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட, அந்த சமயத்தில் காவலர் சார்லி கொலை செய்யப்படுகிறார்.  
இந்த கொலையை விசாரிக்க கிஷோர் வருகிறார், அந்த காவல் நிலையத்தில்  உள்ள பலரையும் பல கோணத்தில் விசாரிக்கிறார் , கடைசியில் சார்லியை கொலை செய்தது யார்?  என்பதை   கிஷோர் கண்டுபிடித்தாரா ? இல்லையா ?  என்பதே  ‘டிராமா’ படத்தின்  கதை.

ஜெய்பாலா காவ்யாபெல்லு காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.  ஷார்லி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
காவல் நிலையத்திற்குள் நடக்கும் கதையை மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஷினோஸின் ஒளிப்பதிவு. பிஜிபால் இசையும் கதைக்கு ஏற்ப இருக்கிறது.

இயக்குனர் அஜூ கிழுமல்லா வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்குனர்   இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்  நன்றாக இருந்திருக்கும் :

Comments

Popular posts from this blog