ஆதார் - விமர்சனம்
கட்டடத்தொழிலாளி கருணாஸ்.அவரது மனைவி ரித்விகா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகாவுக்கு திடீரென்று வலி ஏற்பட அவரை அரசு மருத்துவமனைக்கு கருணாஸ் அழைத்து செல்கிறார்.  அங்கே குழந்தையை பெற்றெடுத்த ரித்விகா காணாமல் போகிறார்.  இவர்களுக்கு துணையாக இருந்த இனியா திடீரென காணாமல் போகிறார். அதன் பிறகு அவரின் சடலம் மட்டும் கிடைக்கிறது.

செய்வதறியாமல் தவிக்கும் கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு காணாமல் போன தன் மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்நிலையம் செல்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் ரித்விகாவை தேடும் காவல்துறை அவரை கண்டுபிடித்ததா? இல்லையா?,  இனியாவின் மரணத்தின் காரணம் என்ன? என்பதே ‘ஆதார்’  படத்தின் கதை.
கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸ் .காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தறுமாறு காவல்நிலையத்தில், கைகுழந்தையுடன் முறையிடும் காட்சிகளில் நடிப்பால்  கண்கலங்க வைக்கிறார் கருணாஸ்,  குணச்சித்திர நடிகராக கருணாஸை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பாராட்டுவார்கள்.
நாயகி ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும்  அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ் என அனைவருடைய நடிப்பும் இயல்பாக இருக்கிறது.
ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் தாலாட்டுப்பாடல் ஒலிக்கிறது. பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.கதைக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, கதாப்பாத்திரங்களை இயல்பாக காட்டியிருப்பதோடு, கதைக்களத்தோடு நம்மையும் பயணிக்க வைக்கிறார்.

கார்ப்பரேட்களின் சூழ்ச்சியில், மனிதர்களின் உயிர்கள்  சாதாரண மனிதனின் நீதி எப்படி தள்ளாடுகிறது என்பதையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்.

Comments

Popular posts from this blog