‘திருச்சிற்றம்பலம்’  - விமர்சனம்

டெலிவரி பாய் வேலை செய்யும் நாயகன்  தனுஷ், இவருடைய வாழ்க்கையில் ஒரு விபத்தின் காரணமாக தனது தந்தை பிரகாஷ் ராஜ்ஜிடம் பேசாமல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். தனுஷ் தாத்தா பாரதிராஜா அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். தாயின் இழப்பால் பயந்த சுபாவமாக மாறும் தனுஷ்க்கு சிறு வயது முதல் தோழியாக இருக்கும் நித்யா மேனன் துணையாக இருக்கிறார்.
கல்லூரியில் தனுஷூடன் படித்த ராஷி கண்ணா திடீரென்று தனுஷை சந்திக்கிறார். இருவரும் சற்று நெருங்கி பழக  தனது காதலைராஷி கண்ணா விடம் கூறுகிறார். ஆனால் ராஷி கண்ணா தனுஷின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நேரத்தில் திடீரென்று பிரகாஷ்ராஜுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். இவர்களது வீட்டுக்கு ஒரு பெண் வந்தால்தான் இவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது. தாத்தா பாரதிராஜா, பேரன் தனுஷை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

ஒரு திருமணத்திற்கு செல்லும் தனுஷ் அங்கு பிரியா பவானி சங்கரை சந்திக்கிறார். அவரை காதலிக்க துவங்கும் தனுசுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைக்கிறது. இந்நிலையில் சிறுவயதில் இருந்து தன்னுடன் பழகும் நித்தியா மேனனை காதலிக்கும் துவங்கும் தனுஷ் அவரிடம் தன்னுடைய காதலை கூறுகிறார். இறுதியில் நித்யா மேனன் தனுஷின் காதலை ஏற்றுக் கொண்டாரா?  இல்லையா?  என்பதே ‘திருச்சிற்றம்பலம்’  கதை.
தனுஷ் காதல், செண்டிமெண்ட், காமெடி, சோகம் என அனைத்திலும் .  நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய தனுஷை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. தனது அப்பாவிடம் சரிக்கு சரி மல்லுக்கட்டி பேசும் காட்சியிலும், அவரைத் தூக்குவதற்கு முன்பு அவர் படும் தவிப்பை காட்டியவிதத்திலும் தனுஷின் நடிப்பு ஸ்பெஷல்தான்.
தனுஷின் தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜாவின் கதாப்பாத்திரமும், நடிப்பும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது. காவல்துறை அதிகாரியாகவும் தனுஷின் தந்தையாகவும் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகன் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் தந்தையாக தன்னுடைய கடமையை சிறப்பாக உள்ளது.
தனுஷின் தோழியாக நடித்திருக்கும் நித்யா மேனன்  போட்டியாக நடித்திருக்கிறார்.  படத்தின் நாயகன் தனுஷ் பயணிக்கும் அத்தனை கதாப்பாத்திரங்களுடனும் பயணிக்கும் மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தை அசால்டாக நடித்திருக்கிறார்  நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண
அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் நகரம் மற்றும் கிராம அழகாக இருக்கிறது.

அப்பா - மகன் இடையே இருக்கும் மோதல் பிறகு அவர்களுக்கு இடையே இருக்கும் பாசம், போன்றவற்றை ஏற்கனவே பார்த்திருந்தாலும் அதையே வேறு ஒரு வடிவத்தில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

,  இந்தப் படம கதையில் போரடிக்காமல், கடைசிவரையிலும் ஒரு பரபரப்பாகவே சென்றிருக்கிறது.

Comments

Popular posts from this blog