நடிகர் கிஷோருடன் ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம்!
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் "மஞ்சக்குருவி" படத்திற்காக செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்பொழுது, ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் தன்னுடன் ஒரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்சரியத்தில் ஆழ்ந்து, இயக்குனர் அரங்கன் சின்னதம்பியிடம் விசாரிக்கும் போதுதான், அந்த நடிகர் ராஜநாயகம் குங்ஃபூ மாஸ்டர் என்பதும், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் தெரியவந்தது. உடனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் கிஷோர்.

கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.

வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, கே.எம்.நந்தகுமார் கலையை கவனிக்க, மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். சௌந்தர்யன் இசையமைத்திருக்கும் "மஞ்சக்குருவி" படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்கியுள்ளார்.

PRO_கோவிந்தராஜ்

Comments

Popular posts from this blog