டைரி’ -  விமர்சனம்

உதகையில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் விபத்துகள் நடைபெறுகிறது. அதேபோல் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அதை யார் செய்தது என்பதை 16 ஆண்டுகளாக காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை எஸ்.ஐ பயிற்சியை முடித்து விட்டு போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் நாயகன் அருள்நிதி கையில் எடுக்கிறார். இந்த வலக்கை  விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு தெரியவருகின்றன. இறுதியில் நாயகன் மர்மங்களுக்கான விடை என்கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘டைரி’
நல்ல கதைகளை  நடிக்கும் அருள்நிதி,படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட்  என அனைத்திலும்  கச்சிதமாக பொருந்துகிறார்.. உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி பவித்ரா மாரிமுத்து. முதல் காட்சியில் ஒருவரை அடித்து நொறுக்கி அதிரடியாக என்ட்ரியாகும் பவித்ராவுக்கு 
சாம்ஸ், ஷாரா  இருவரும் காரம் காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்கள்   கிஷோர் , ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம் அ  சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ரான் ஈத்தன் யோஹனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் படத்தின் பின்னணி இசை நம்மளை படத்துடன் பயணிப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது.

டைரி படத்தின் பெரும்பாலான காட்சிகள் பேருந்து பயணத்திலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் அதற்குள் உருவாகும் நட்பு, திருமணம், பாடல் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. அதற்கு அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு பெரும் உதவி செய்துள்ளது.

முதல் பாதியில் நகரும் கதை இடைவேளைக்கு பிறகு வேகமாக நகர்கிறது. முதல் பாதி முழுக்க பேருந்துக் காட்சிகளே  இரண்டாம் பாதிக்கு பிறகு வரும் டுவிஸ்ட்கள் அனைத்தும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருக்கும். நிறைய முடிச்சுகள், அதைக் கச்சிதமாக அவிழ்த்ததில்  வெற்றிபெற்றுவிடுகிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன்
 திரில்லர் படத்தை  பார்த்த உணர்வை  கொடுக்கும் ‘டைரி’

Comments

Popular posts from this blog