குலு குலு’ - விமர்சனம்
 சந்தானம் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து பல மொழிகளை கற்றுக்கொண்டு இறுதியாக சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்கிறார் சந்தானம்.
ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டதாக கூறி சந்தானத்திடம் உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள். உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் சந்தானம் அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ‘குலு குலு’  படத்தின் கதை.
கூகுள் என்ற கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார்.   நகைச்சுவையில் கலக்கி வந்த சந்தானம் இந்த படத்தில் நேர்மாறாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.  செண்டிமெண்ட், சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படும் விதம் என கதாபாத்திரத்துடன் ஒன்றி போய் இருக்கிறார் கதாநாயகியாக அதுல்யா சந்திரா நடித்திருக்கிறார். வில்லனாக பிரதீப் ராவத் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் ,
நமிதா கிருஷ்ணமூர்த்தி, சாய் தீனா, கவி, லொள்ளு சபாவின் சேசு, மாறன், தீனா எனத் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள். சில காட்சிகளே வந்தாலும்  மாறன், சேசு இருவரும்  தங்களுக்கே உரிய பாணியில் பேசும் வசனங்கள சிரிப்பொலிகளால் அதிரவைக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு  சென்னையை தனது மாறுபட்ட கோணங்களால் மிக அழகாகவும் வித்தியாசமாகவும் காட்டிக்  கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

சந்தானம் கதாபாத்திரம் மூலம் வாழ்க்கையின் அர்த்தம், பெண் சுதந்திரம் உள்ளிட்டவற்றைப் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். அவை பெரிதாக அழுத்தம் இல்லாமல் கடந்துபோகின்றன.  படத்தில் முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.  குலுகுலுவை ரசிக்கலாம்.



Comments

Popular posts from this blog