வேழம்  - விமர்சனம்

K4 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில்  அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி ஆகியோர் நடிப்பில்  வேழம்

சைக்கோ கொலையாளியால் வனத்துறை அமைச்சரின் இளைய மகன் ஊட்டியில் கொலை செய்யப்படுகிறார்.  அசோக் செல்வனின்  காதலி ஐஸ்வர்யா மேனனும் கொலை செய்யப்படுகிறார். இச்சம்பவம் நடந்த இடத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால் கொலையாளி யார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத ஏற்படுகிறது.,
கொலை நடந்த இடத்தில் கேட்ட ஒரே ஒரு குரல் ஒலியை மட்டுமே வைத்துக்கொண்டு கொலையாளியை தேடி செல்லும் அசோக் செல்வனுக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கிறது.. இறுதியில் அசோக் செல்வன் கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே வேழம் படத்தின் மகதை.
 நாயகனாக  நடித்திருக்கும் அசோக் செல்வன், அதிரடி  கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  குற்றவாளியை கண்டுபிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது  நாயகிகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என  இருவரும் கதையுடன் பயணிக்கும் கதாப்பாத்திரங்களாக இருப்பதோடு, நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் சுந்தர்,  அற்புதமாக நடிப்பை முதல் படத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்., கிட்டி, பி.எல்.தேனப்பன் 

ஜானு சந்தரின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் மெலோடியாக உள்ளது. சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவில் ஊட்டி அழகாக இருப்பதோடு, ஆபத்து நிறைந்த பகுதியாகவும் தெரிவது படத்திற்கு பலம் .
சைக்கோ கொலைகளுடன் தொடங்கும் படம் அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்ப்பார்க்காத திருப்புமுனைகளோடு  சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கும் . இயக்குநர் சந்தீப் ஷ்யாம், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை  சஸ்பென்ஸோடு கதையை சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘வேழம்’ சஸ்பென்ஸ் த்ரில்லர் .

Comments

Popular posts from this blog