மாயோன் - விமர்சனம்

தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வரும் நாயகன் சிபி சத்யராஜ் சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடியுடன் கூட்டணி வைத்து கோவில் புதையல்களை வெளிநாட்டுக்கு கடத்த நினைக்கிறார்கள் மற்றொரு புறம் சிலை கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வருகிறார்கள். இந்நிலையில், மாயோன் மலையில் இருக்கும் கோயிலில் ரகசிய அறை இருப்பதாகவும், அதற்குள் புதையல் இருப்பதாகவும் ஹரிஷ் பெராடிக்கு தகவல் வருகிறது.
அந்த புதையலை எடுக்கும் பணியை சிபி சத்யராஜுக்கு ஹரிஷ் பெராடி கொடுக்கிறார். அந்த கோவிலுக்குள் செல்லும் சிபி சத்யராஜுக்கு பல தடைகள் வருகிறது. இறுதியில் சிபி சத்யராஜ் கோவிலுக்குள் சென்று புதையலை எடுத்தாரா? .இல்லையா? என்பதே  மாயோன் படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், . தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன் 
கே.எஸ்.ரவிக்குமார், ஹரீஷ்பேரடி, ராதாரவி, பக்ஸ், மாரிமுத்து உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். அனுபவ நடிகர்கள் என்பதால் காட்சிகளிலும் அது நிறைந்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது..தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம், திரைக்கதை எழுதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன.ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவில் பழங்காலக் கோயிலின் உள்ளும்புறமும்  காட்டப்பட்டுள்ளன. .

படத்தின் கதைக்களம் மாயோன் மலை, கிருஷ்ணர் கோயில் ஆகிய இடங்களை மட்டுமே சுற்றி நகர்கிறது. இருப்பினும் எந்த அளவிற்கு விறுவிறுப்பைக் கொடுக்க முடியுமா அதைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.என்.கிஷோர்  


Comments

Popular posts from this blog