வாய்தா  - விமர்சனம்
சலவை தொழிலாளி செய்யும் பெரியவர்  ராமசாமி மீது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த  பெரியமனிதர்  மகன் இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதி விடுகிறார்.  இதனால் படுகாயமடையும் பெரியவர் மருத்துவ செலவை கொடுக்குமாறு அந்த ஊர் அரசியல்வாதி பக்கத்து கிராமத்து பெரிய மனிதரிடம் இழப்பீடு கேட்கிறார். இந்த பஞ்சாயத்து மோதலாக மாறி  விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்கிறது. இறுதியில் நீதிமன்றத்தில்  பெரியவருக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதே   “வாய்தா” படத்தின் மீதிக்கதை.
சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க வைக்கிறார். நாயகனாக   நடித்திருக்கும் புகழ்  விசைத்தறித் தொழிலாளியாக நடித்திருக்கிறார்.. 
நாயகி ஜெசிகாபவுல். அழகாக  வந்து அற்புதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாசர்  கதாபாத்திரம் மனதில் நிற்கும். சி.லோகேஷ்வரன் இசையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் , சேது முருகவேல் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் 
ஜாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதும், இழிவு நிலைக்கு தள்ளபடுவதுமாய் ஒரு சமூகம் இருக்கிறது. அந்த சமூகத்திற்கு ஏற்படும் அநீதிகளுக்கு நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை என்ற சமூக நடப்பை ஆணித்தனமாக கூறுகிறது   இந்த 'வாய்தா' ஒரு சிறிய சம்பவத்தை கருவாக எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு சாதி அரசியல் நடக்கிறது என்பதை ஆணி வேறாக அலசியிருக்கிறார் இயக்குனர் மகிவர்மன் சி.எஸ்.

Comments

Popular posts from this blog