'போத்தனூர் தபால் நிலையம்' - விமர்சனம்
 
நாயகன் பிரவீணின் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக வேலை செய்கிறார்.  ஒருநாள்  தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணம், ஏற்கெனவே இருக்கும் பணம் என 7 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த 2  நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அப்பணம் இருந்தால் பாதுகாப்பில்லை எனக் கருதும் போஸ்ட் மாஸ்டர் அப்பணத்தை தன் வீட்டிற்குக் கொண்டு செல்கிறார்.  போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது
நேர்மையான அந்த போஸ்ட் மாஸ்டர்  அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்லத் தயாராகிறார். அந்த நேரத்தில்  சொந்தத் தொழில் தொடங்க அலைந்து கொண்டிருக்கும் அவர் மகன், அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க  செல்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? இல்லையா?  என்பதே  ‘போத்தனூர் தபால் நிலையம்’ படத்தின் மீதிக்கதை.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரவீன்   நாயகனாகவும் நடித்திருக்கிறார்.  கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார். அப்பாவை காப்பாற்ற களத்தில் இறங்குபவர், பணத்தை பார்த்ததும் எடுக்கும் முடிவு எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டாக இருப்பதோடு, அந்த இடங்களில் பெஸ்ட்டான நடிப்பை கொடுத்து பாராட்டுப் பெறுகிறார்.
நாயகி அஞ்சலி ராவ். ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலனுக்காக எப்போதும் கூடவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். பிரவீண் நண்பனாக வெங்கட் சுந்தர். இவரது கதாபாத்திரம் ரசிக்கும் விதத்த்தில் இருந்தது.
அப்பா கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ்,  போஸ்ட் மாஸ்டர் வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணக்காளராக நடித்திருக்கும் சீத்தாராமன், தபால் நிலைய ஊழியர்களாக நடித்திருக்கும் தீனா அங்கமுத்து, சம்பத்குமார் என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு  நடித்திருக்கிறார்கள்.

தென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பின்னணி இசையையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். 90களின் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர்

ஒரு சாதாரண பணம் திருட்டு போகும் கதையை சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரவீன், படத்தின் முதல் பாதி,  மெதுவாக இரண்டாம் பாதி படத்தின் வேகத்தை கூட்டுகிறது.  



Comments

Popular posts from this blog