பருவ காதல்
ராம் ஃபிலிம் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஹால்வின் தயாரிக்கும் படம் ,பருவ காதல்,
ஆர் சுந்தர்ராஜன் கிருஷ்ணன் ஜெயந்தன் பகவதி பாலா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய அருங்கால் கு.ரவி இயக்கியுள்ளார் .
படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் ...
கல்லூரியில் படிக்கும் நாயகன் நாயகி இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள் இந்நிலையில் நாயகன் மேற்படிப்பிற்காக ரஷ்யா செல்கிறான்.
அங்கு படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான். நேராக நாயகி வீட்டிற்கு போகிறார் அங்கு நாயகியை காணவில்லை பின்பு நாயகியை தேடி அலைகிறார் கடைசியில் கண்டுபிடித்தாரா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.
,
நாயகனாக காளிங்கராயன் நாயகியாக சல்மிதா நடித்துள்ளனர்.
 ஊர் தலைவராக ஆர் சுந்தர்ராஜன்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைக்கு வலு சேர்க்கும் வகையில் படம் முழுக்க அவரது நடிப்பு இருக்கும்.
போண்டா மணி, கண்ணாயிரம், சித்திரகுப்தன், கே கே ரமேஷ், அரித்துவாரமங்கலம் சுவேதா , மெடிக்கல் குமார்  ஆகியோர் படம் முழுக்க நடித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் ஒரு உருக்கமான காதல் கதையை கொண்ட படமாக இது அமையும்,  கடந்த நான்கு மாதங்களாக ஓசூர் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம்.

காதல் காமெடி இரண்டும் கலந்து கொடுத்து உள்ளேன் என்று கூறினார்.

தஞ்சை அருண் பிரசாத்  இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு டி. மகிபாலன் 
எடிட்டிங் நாகசந்திரா .
நடனம் :ராம் முருகேஷ் ,
பவர் சிவா ,
பாடல்கள்: தஞ்சை சின்ன பொண்ணு இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

வி எம் ஆறுமுகம் 909 209 6558

Comments

Popular posts from this blog