உழைக்கும் கைகள் - விமர்சனம்
மக்கள் திலகம் எம்ஜிஆர்  கே ஆர் விஜயா  விகே ராமசாமி, நாகேஷ், மனோரம்மா, விஜயகுமாரி,  ஆகியோர் நடித்து 1967 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "விவசாயி"  இந்த படத்தின்  உருவாகியிருக்கும் நாமக்கல் எம்ஜிஆர் நடிக்கும்  "உழைக்கும் கைகள்"
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நாமக்கல் எம்.ஜி.ஆர்  கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு படத்தை இயக்கி  இருக்கிறார். பார்ப்பதற்கு  எம்.ஜி.ஆர் போல் இருக்கும்  நாமக்கல் எம்.ஜி.ஆர் காதல், பாசம்  ஆக்‌ஷன் என எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் கிரண்மை நடிப்பு, நடனம்  என அனைவரது கவனத்தையும்  ஈர்க்கிறார்
வில்லனாக நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம் மிரட்டலாக நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்கள்  போண்டா மணிqa, ஷர்மிளா, விஜயலட்சுமி, மோகன், பிரேம்நாத், செந்தில்நாதன் கதாபாத்திரங்கள் .
எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படத்தின் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து பாடல்களையம்  பாடலின் தரம் குறைந்து விடாமல் புதுப் பொலிவுடன் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேசை   பாராட்டியாக வேண்டும்  . இயற்கையின் அழகை அற்புதமாக  படம்பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிலாளர் சிவா
50 வருடங்களுக்கு முன்பு  வெளியான படத்தின் கதையை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு  விவசாயிகளின் பிரச்சனைகளை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளை மிக அழுத்தமாக பேசியிருக்கிறார். நாமக்கல் எம்ஜிஆர்

Comments

Popular posts from this blog