l
கூர்மன் - திரை விமர்சனம்
முன்னாள் காவல்துறை அதிகாரியான நாயகன் ராஜாஜி  தன காதலி ஜனனி மறைவிற்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  ஒரு பண்ணை வீட்டில்   வேலைக்காரன் பாலசரவணன், சுப்பு என்ற நாய்  உடன் வசித்து வருகிறார்..  நாயகன் ராஜாஜிக்கு ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர். காவல்துறைக்கு சவாலாக இருக்கும் பல வழக்குகளை தன் வீட்டில் இருந்தபடியே தீர்த்து வைக்கிறார்.
போலீஸ் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறார் . அந்தக் குற்றவாளி ராஜாஜியின் பண்ணை வீட்டிலிருந்து தப்பிக்கிறார். இதனால் கோபமடையும் ஆடுகளம் நரேன், குற்றவாளியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ராஜாஜிக்கு  உத்தரவிடுகிறார். இதனையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே செல்லும் நாயகன் உண்மையான குற்றவாளியை பிடித்தாரா? இல்லையா? என்பதே   “கூர்மன்”. படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, அழுத்தமான கதாப்பாத்திரத்தில்  நடித்திருக்கிறார். , காதல், ஆக்ரோஷம் என நடிப்பில்  காண்பித்திருக்கிறார்.
ராஜாஜியின் வேலைக்காரராக நடித்திருக்கும் பாலசரவணன், காதலியாக நடித்திருக்கும் ஜனனி ஐயர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நரேன் என அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக  செய்திருக்கிறார்கள்.

டோனி பிரிட்டோவின் இசையும்  சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,  எனற  கதைக்களத்தை கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ்.


Comments

Popular posts from this blog