வலிமை - விமர்சனம்

மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.  சென்னையில் தொடர்ந்து  கொள்ளை, கொலை சம்பவங்கள் நடக்கிறது .அதனை கட்டுப்படுத்துவதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் அஜித். அவர்களை  பற்றி  விசாரிக்கும் அஜித்துக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைப்பதோடு, தகவல் தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் பல குற்றங்களை செய்து வரும் முக்கிய குற்றவாளி பற்றியும் தெரிய வருகிறது.   அதன் பிறகு கொலை, கொள்ளை, பைக் கேங், போதை பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்ய நெருக்கும் நிலையில் அஜித்திற்கு எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் மீண்டு குற்றவாளியை கண்டு  பிடித்தாரா? இல்லையா? என்பதே வலிமை' படத்தின் கதை .
காவல்துறை அதிகாரியாக அஜித் கம்பீரமாக வலம் வருகிறார். பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அம்மா, அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அஜித் குமாரை திரையில் கண்ட ரசிகர்களுக்கு இப்படம் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்..
நாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில் அசத்தி இருக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர்  சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
படம் முழுக்க பைக் ரேஸ் சாகசங்கள், ஹாலிவுட் தரத்திலான சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பைக் சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது.



Comments

Popular posts from this blog