அஷ்டகர்மா  - விமர்சனம்

மனோதத்துவ டாக்டர் கிஷனுக்கு பேய், ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் நாயகிக்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி கூற அவரை இப்னாடிஸம் செய்து சிகிச்சை அளிக்கிறார்.  பேய் இருக்கிறதா இல்லையா என்று டிவியில் நடக்கும் விவாத மேடையில் கிஷன் பங்குகொள் கிறார். அங்கு பேய் என்று ஒன்று கிடையாது என வாதாடுகிறார்.  அதே விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர், தான் சொல்லும் பங்களாவில் தங்கி இருந்தால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கி றேன் உங்களால் தங்க முடியுமா என்று சவால் விடுகிறார்.
அந்த பங்களா தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நாயகிக்கு சொந்தமானது. அவரோ தங்குவதற்கு அனுமதி மறுக்கிறார்.இதற்கிடையே கதாநாயகியை எப்போதும் எதாவது பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்க, பின்னர்தான் நாயகிக்கு யாரோ செய்வினை செய்த விவகாரம் கிஷனுக்கு தெரியவருகிறது.   இதை நாயகி குடும்பத்தாரிடம் சொல்லி செய்வினையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் கிஷன்.இறுதியில் நாயகியை சுற்றும் செய்வினையில் இருந்து அவரை காப்பாற்றினாரா, இல்லையா, என்பதே ‘அஷ்டகர்மா’ . மீதிக்கதை.
நாயகனாக அறிமுகமாகி இருக்கும் சி.எஸ்.கிஷன் படத்தையும் தயரித்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு   கதைக்கு தேவைப்படும் காட்சிகளில் எதார்த்தமாக  நடித்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ஷிரிதா சிவதாஸ், நந்தினிராய்  முக்கிய வேடத்தில் முழுமையாக நடித்து மனதில் நிற்கிறார்கள்.

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், எல்.வி.முத்துகணேஷ் இசையும் படத்துக்கு  துணை நிற்கிறது.  இயக்குனர் டி.ராஜேந்தர் பாடிய  ஒரு பாடல் கிளை மாக்ஸுக்கு பிறகு ஒலிக்கிறது.

வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதை நேர்த்தியாகவும், படம் பார்ப்பவர்கள் ஆச்சரியம் அடையும் விதத்திலும் சொல்லியிருக்கிறார்.  விஜய் தமிழ்செல்வன் ஹாரர் படமாக  உருவாக்கியிருக்கிறார்.



Comments

Popular posts from this blog