சில நேரங்களில் சில மனிதர்கள் - விமர்சனம் 

நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா ஆகியோரது வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள், அவர்களை எப்படி மாற்றுகிறது என்பது தான், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் கதை.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் நாசர் இவருடைய மகன் அசோக் செல்வன் தனியார் மொபைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் தனது காதலியான ரியாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இரு வீட்டாரின் சம்மதத்தோடு இத்திருமணம் நடைபெறவிருக்கிறது.
திருமணநாள் நெருங்குவதால் நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க செல்கிறார். நாசர்  வீடு திரும்பும்போது சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரவீன் ராஜா கார் மோதி பலியாகிறார். நாசர் இந்த பழி  இளம் நடிகர் அபிஹாசன் மீது விழுகிறது. இதற்கிடையில் நடிகர்தான் இந்த விபத்தை நடத்தினார் என அவரை சமூக வலைதளத்தில் அவமானப் படுத்துகின்றனர்.  இறுதியில்  இந்த பிரச்சனையில் இருந்து இளம் நடிகர் மீண்டாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாசர் தனது நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நடித்திருக்கும் அசோக்செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், ரியா  உள்ளிட்ட  அனைவருமே எதார்த்தை வெளிப்படுத்தி   இருப்பதுதான்  படத்தை மனதுக்கு நெருக்கமாக கொண்டு வந்து நிறுத்துகிறது.
அபி ஹாசன், சரியான புரிதலின்றி ஆடியோ லாஞ்சில் சிறுபிள்ளைத் தனமாக பேசி மீடியாக்களின் கோரப்பசிக்கு பலியாவது, அவரைப்பற்றிய ட்ரோலின் போதும், அதற்கு பதிலளித்து பேசும் போதும் சிறப்பாக நடித்திருக்கிறார்.  புலம்பும் கதாபாத்திரத்தில் மணிகண்டன் சிறப்பாக நடித்திருக்கிறார். கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் 
படத்திற்கு மிகப்பெரும் பலமாக ரதனின் இசை நிற்கிறது. ஒளிப்பதிவில் காட்சியின் அழகை விட உணர்வை படமாக்க்கியிருகிறார் மெய்யேந்திரன்
நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்களை நேர்த்தியான திரைக்கதையின்  மூலம் சொல்லிஇருக்கிறார்  இயக்குநர் விஷால் வெங்கட் மற்றவர்களின் தவறுகளில் தவறு இல்லாத மனிதன் பாதிக்கப்படுவதை சொன்ன விதம் அருமை  பாராட்டுக்குரியது.நிறைய காட்சிகள் கண்ணீர் வர வைக்கிறது.

Comments

Popular posts from this blog