மருத  - விமர்சனம்

சரவணன், ராதிகா இருவரும் அன்னான் தங்கை ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு  சரவணன் பல்லாயிரக்கணக்கான பணம்,  தங்க சங்கிலி என அதிகமாக செய்முறை செய்கிறார்.   அதன் பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.  இதனால் கோபம் அடையும்  சரவணனின் மனைவி விஜி தாங்கள் செய்த செய்முறை பணத்தை  தி்ரும்ப செய்ய  சொல்லி  ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் அவமானப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்துகிறார். இதனால்  அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
இதன் பிறகு சரவணன் குடும்பத்திற்கும் ராதிகா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்கிறார்கள்.  இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா?  அன்னான் - தங்கை குடும்பம்  ஒன்று சேர்ந்ததா? இல்லையா ? என்பதே  'மருத'  படத்தின் மீதிக்கதை.

இயக்குனர் ஜி.ஆர்.எஸ் படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல்  கதாநாயகனாகவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். செண்டிமெண்ட், காதல் என அனைத்து ஏரியாக்களிலும் அதிரடி காட்டி தன்னை நிரூபித்திருக்கிறார். தன தாயை அவமானப்படுத்திய விஜி சந்திரசேகரரின் தலை முடியை  அறுத்தெறிவ்யும்போது நடிப்பில் அசத்தி  இருக்கிறார் நாயகனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகரின் கிராமத்து பெண்ணாக தனது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்..
ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அண்ணன் பாசம், தாய் பாசம் என அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் செய்முறை செய்யாதவர்களை மிரட்டும் போதும் அதை திரும்பி வாங்கும் போதும் அவருடைய நடிப்பு  ஆக்ரோஷமாக இருக்கிறது. பருத்திவீரன் சரவணன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி  ஆகியோருக்கு   கொடுத்த வேலையை  சரியாக செய்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை  அழகாக படம்பிடித்தி காட்டியிருக்கிறார்.
பாரதிராஜாவின் உதவியாளரான ஜி.ஆர்.எஸ் பாரதிராஜா பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். பெருமைக்காக செய்முறை செய்துவிட்டு கடனாளியாக தவிப்பவர்களின் கண்ணீரையும், செய்முறை என்ற பெயரில் கந்துவட்டிக்காரர்களாக செயல்படுபவர்களின் கொடுமையையும் தைரியமாக பதிவு  செய்திருக்கும் இயக்குனரை பாராட்டியாக வேண்டும்.

நடிப்பு: ராதிகா சரத்குமார், விஜி, சரவணன், வேல ராமமூர்த்தி,  ஜி ஆர் எஸ், லவ்லின் சந்திரசேகர், மாரிமுத்து,  கஞ்சா கருப்பு

இசை: இசைஞானி இளையராஜா

இயக்கம்: ஜி ஆர் எஸ்

தயாரிப்பு: பிக்வே பிக்சர்ஸ் சபாபதி

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
 

Comments

Popular posts from this blog