: பீனிக்ஸ் MovieReview- விறுவிறுப்புடன் ஆக்ரோஷம் நிறைந்த பழி வாங்கும் ஆக்ஷன் அதிரடியில் ஈர்க்கும் | ரேட்டிங்: 3.5/5 : எம் எல் ஏ-வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்கிறார் சூர்யா சேதுபதி 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் சீர்த்திருத்த சிறையில் அடைக்கிறார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார் போலீஸ் உயர் அதிகாரியான ஹரீஷ் உத்தமன்
இந்நிலையில் எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்ஷ்மி சரத்குமார், தனது ஆட்களை சிறைக்குள் அனுப்பி சூர்யாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். அவர்களது திட்டத்தை தகர்த்தெரிகிறார் சூர்யா விஜய்சேதுபதி.
இதனையடுத்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் சூர்யா விஜய்சேதுபதியை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய எம் எல் ஏ-வின் ஆட்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
இறுதியில் சூர்யா எம் எல் ஏ சம்பத்தை கொலை செயதற்கான காரணம் என்ன? போலீஸ் உயர் அதிகாரியான ஹரீஷ் உத்தமன் சூர்யாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’பீனிக்ஸ்’ படத்தின் கதை.
அறிமுக படத்திலேயே அதிரடி நாயகனாக வலம் வருகிறார் சூர்யா சேதுபதி. காதல், நடனம்,ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையுமே படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
பழி வாங்கும் கதையை மைய கருவாக வைத்து ஒரு முழு நீள ஆக்ஷன் அதிரடி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அனல் அரசு இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன்
இசை : சாம்.சி.எஸ்,
இயக்கம் : அனல் அரசு
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது & பராஸ் அகமது
Comments
Post a Comment