ஹெச்.எம்.எம் (H.M.M)
(ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை)
         
அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில் ஓர் இரவில்  தொடர்ந்து மூன்று கொலைகள் அரங்கேறுகிறது.
அதை செய்கிறது முகமூடி அணிந்த உருவம். ஏன் அந்த கொலைகள்...?
 அந்த முகமூடி மனிதன் யார் ? அவனின் இந்த
கொடூர  கொலைகளுக்கு பின்னால் இருக்கும் கதை என்ன..?
என்பதை மிகவும் விறுவிறுப்பாக
நள்ளிரவின் பின்னணியில் திடுக்கிடும் சம்பவங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடனும் திரைக்கதை அமைத்து தயாரித்து எழுதி இயக்கியுள்ளார்  நரசிம்மன் பக்கிரிசாமி.
பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் போன்ற நட்சத்திரங்கள் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.
ஒளிப்பதிவு - கிரண்
பின்னணி இசை -புரூஷ்
படத்தொகுப்பு - துரைராஜ்
சண்டை பயிற்சி - "ஸ்டண்ட்"-சுரேஷ்
மக்கள் தொடர்பு - வெங்கட்
இணை இயக்கம்- துரைராஜ் -சிவக்குமார் 

கதை  திரைக்கதை வசனம்  தயாரிப்பு இயக்கம் -
நரசிம்மன் பக்கிரி சாமி

இப்படத்தில் பாடல்களே இல்லை. முழுக்க முழுக்க  படம் நள்ளிரவு காட்சிகளாகவே படமாக்கப்பட்டிருக்கின்றது. 
பின்னணி இசை படத்திற்கு வலுவூட்டுகிறது.

படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்த நிலையில் இம்மாதம் செப்டம்பர் 13-ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog