‘ஜென்ம நட்சத்திரம்’ - விமர்சனம்
தமன் - மால்வி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். தமன் நண்பன் அருண் கார்த்தி இவருடைய காதலி ரக்ஷா செரின் இவர்கள் அனைவரும் ஒரே பங்களாவில் வாழ்ந்து வருகிறார்கள். தமன் மனைவி மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதோடு, சில பயங்கரமான உருவங்களும் கனவில் வந்து போகிறது.
இந்நிலையில் தமன் தயாரிப்பாளருக்கு கதை சொல்வதற்க்காக கோவை செல்கிறார். எம் எல் ஏ வேலராமமூர்த்தியின் உதவியாளரான காளிவெங்கட் உயிருக்கு ஆபத்தான நாயகி மால்வியை சந்தித்து தனது பெண் குழந்தை மருத்துவ சிகிச்சைக்காக 40 லட்சம் தேவைபடுவதாகவும் அதற்கான பணம் 57 கோடி ரூபாய் பாழடைந்த தொழில் சாலையில் மறைத்து வைத்து உள்ளதாக கூறி விட்டு இறந்து விடுகிறார்.
பணத்தை எடுப்பதற்காக தமன், மால்வி மல்ஹோத்ரா மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்ல, மால்வி மல்ஹோத்ரா தன் கனவில் பார்க்கும் பயங்கரமான உருவங்களை அந்த இடத்தில் பார்க்கிறார். அதே சமயம் தமனுடன் வந்த நண்பர்கள் அடுத்தடுத்து மர்மனான முறையில் இறக்கிறார்கள்.
இறுதியில் தமன் நண்பர்களை கொலை செய்து யார்? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? 57 கோடி பணத்தை கைப்பற்றினாரா? இல்லையா? சிறுமியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் தமன் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறாள். மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா அழகாக இருப்பதுடன் அளவான நடிப்பபை கொடுத்திருக்கிறார். இருவரும் முழு படத்தை தோல் மீது தாங்கி நிற்கிறார்கள்.
தமனின் நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா மற்றும் அவரது காதலியாக நடித்திருக்கும் ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி. காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. கே.ஜி ஒளிப்பதிவு மிரட்டலாக உள்ளது.
குழந்தை, பணம், துரோகம், அமானுஷ்யம் ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள சஸ்பென்ஸ் திகில் நிறைந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மணிவர்மன் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : தமன் ஆக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த்
இசை : சஞ்சய் மாணிக்கம்
இயக்கம் : மணிவர்மன்
மக்கள் தொடபு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர் (D one)
Comments
Post a Comment