‘கெவி’  -  விமர்சனம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள  “கெவி” என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஆதவன் இவரது மனைவி ஷீலா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த பகுதியில்  சாலை வசதி, மருத்துவ வசதி இல்லாமல் இருக்கிறது.

இதே சமயம்  தேர்தல் பிரசாரத்திற்காக எம்.எல்.ஏ வேட்பாளர் வரும் வேலையில் மலை சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிர் இழக்கின்றனர். அதை ஆவேசத்துடன் தட்டிக் கேட்கிறார் ஆதவன். அப்போது போலீஸ் அதிகாரியாக இருக்கும் சார்ல்ஸை செருப்பால் ஊர் மக்கள் அடிக்கின்றனர்.இதனால், ஆதவன் மீது கோபமடையும்  போலீஸ் அதிகாரி அவரை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறார் ஆதவனின் மனைவியான ஷீலாவிற்கு பிரசவ வலி வர அவரை காப்பாற்ற ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து டோலி கட்டி ஷீலாவை காட்டுவலியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்படுகின்றனர்.

மறுபுறம் இரவு வீடு திரும்பும் ஆதவனை காவல்துறை அதிகாரிகள சேர்ந்து கொலை செய்ய முயற்சிக்கிறது. காவலர்களிடம் சிக்கி நாயகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட  மறுபக்கம் கர்ப்பிணி ஷீலாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இறுதியில் காவலர்களிடம் இருந்து நாயகன் ஆதவன் உயிர் பிழைத்தாரா? இல்லையா? ஷீலா மற்றும் குழந்தையை ஊர் மக்கள் காப்பற்றினார்களா? இல்லையா? என்பதே ‘கெவி’  படத்தின் கதை.
மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காவலாளியிடம் இருந்து உயிர் பிழைக்க எடுக்கும் முயற்சிகள் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க எடுக்கும்
 முயற்சிகள் என முழு உழைப்பை கொடுத்திருக்கிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா  எந்தவிதமான கதாபாத்திரமானாலும் அதை சிறப்பாக செயக்கூடியவர்  இத படத்திலும் அதை சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டை பெறுகிறார்.

பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி இசையில், பாடல்கள் அனைத்தும்  கெடுக்கும் ரகம், பின்னணி இசை கதையோடு  பயணிக்கிறது. ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு மலை,காட்டு, இரவு நேரம் என அனைத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்.

மலைவாழ் மக்களின் அன்றாட  போராட்டங்களையும், அரசியல் வாதிகளின் ஆணவ போக்கையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் மைய கருவாக வைத்து  திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன்,  


நடிகர்கள் : ஷீலா ராஜ்குமார், ஜாக்லின், ஆதவன், சார்ல்ஸ் வினோத், ஜீவ சுப்ரமணியம்
இசை : பாலசுப்ரமணியன்.ஜி
இயக்கம் : தமிழ் தயாளன்
மக்கள் தொடர்பு : ஜான்

Comments

Popular posts from this blog