’பறந்து போ’ - விமர்சனம்
சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மிர்ச்சி சிவா இவரது மனைவி கிரேஸ் ஆண்டனி மற்றும் மகன் மிதுன் ரியானுடன் வாழ்ந்து வருகிறார். கடை ஒன்றை வைக்க என்று ஆசைப்படும் சிவா வீடு வீடாக பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
துணிக்கடை வைத்திருக்கும் கிரேஸ் ஆண்டனி வேலை விஷயமாக கோயம்பத்தூர் செல்கிறார். மகனுக்கு கோடை விடுமுறை என்பதால் மகனை சிவா பார்த்து கொள்கிறார்.மகனுக்கு தேவையான அனைத்தையும் தன் சக்திக்கு மீறி செய்து கொடுக்கிறார். ஆனால் மகனோ குறும்பு செய்வதே வேலையாக வைத்திருக்கிறார்.
எப்போதும் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிவா இந்நிலையில் கடன் கொடுத்த ஒருவர் சிவாவை துரத்த மகனுடன் பைக்கில் நெடு தூரம் பயணிக்கிறார்கள். இறுதியில் மகனின் ஆசையை சிவா நிறைவேற்றினாரா? இல்லையா? மகனுக்காக சிவா சிகரெட் பிடிப்பதை நிறுத்தினாரா? இல்லையா? என்பதே ’பறந்து போ’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா எதார்த்தமான நடிப்பின் முலம் கவனம் பெறுகிறார். உடல் மொழி மற்றும் டைமிங் காமெடி மூலம் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.
சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவான கிரேஸ் ஆண்டனி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான் செய்யும் குறும்புகள் ரசிக்கவும் ,சிரிக்கவும் வைக்கிறது.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ்,விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம் என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு அழகு
குழந்தைகளுக்கு சந்தோசம் எங்கு கிடைக்கிறது என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராம், முதல் முறையாக நகைசுவை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.
நடிகர்கள் : மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான், அஞ்சலி, பாலாஜி சக்திவேல், அஜு வர்கீஸ், ஸ்ரீஜா ரவி
இசை : சந்தோஷ் தயாநிதி – பின்னணி இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : ராம்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
Comments
Post a Comment