லவ் மேரேஜ்’ - விமர்சனம்
உசிலம்பட்டியில் வசிக்கும் நாயகன் விக்ரம் பிரபு துணிக்கடை நடத்தி வருகிறார். வயது 33 கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார். ஊரார் மற்றும் உறவினர்கள் எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள்.
இந்நிலையில் கோபி செட்டிபாளையத்தில் பெண் ஒன்று அமைய, அங்கு நிச்சயதார்த்தம் செய்வதற்காக விக்ரம் பிரபு தனது குடும்பத்தோடு செல்கிறார். சுஷ்மிதாவை கண்டதும் விக்ரம் பிரபுவிற்கு பிடித்து போக, உடனே திருமணத்திற்கு சரி சொல்லிவிடுகிறார்
நிச்சயம் முடித்து ஊருக்கு கிளம்பும் சமயத்தில் இவர்கள் வந்த வேன் ரிப்பேர் ஆகிவிட, பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மறுநாள் ஊருக்கு கிளம்பு நினைக்கையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், மேலும் சில நாட்கள் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை குடும்பத்தார் தங்குகிறார்கள்.
இந்த காலக்கட்டத்தில் சுஷ்மிதாவுடன் பேசி பழக விக்ரம் பிரபு முயற்சிக்கிறார். கையோடு திருமணத்தையும் நடத்திவிடலாம் என்று இருவீட்டாரும் முடிவெடுக்க, அன்று, இரவோடு இரவாக சுஷ்மிதா வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்து விடுகிறார்.
இறுதியில் சுஷ்மிதா வீட்டை விட்டு ஓடி போவதற்கான காரணம் என்ன? விக்ரம் பிரபுவிற்கு திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பதே ’லவ் மேரேஜ்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வித்யாசமான நடிப்பின் மூலம் தனி கவனம் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து அனைவரின் கவனத்தை பெறுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் கெடுக்கும் ரகம், .பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்
33 வயதை கடந்த இளைஞரின் வாழ்க்கையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சண்முக பிரியன் இத்திரைபடத்தை காதல்,காமெடி,குடும்பம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
நடிகர்கள் : விக்ரம்பிரபு, சுஷ்மிதா, மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ்
இசை : ஷான் ரோல்டன்
இயக்கம் : சண்முக பிரியன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Comments
Post a Comment