’கண்ணப்பா’  -  விமர்சனம்
வேடவர் இனத்தின் தலைவர் சரத்குமார் இவரது மகன் விஷ்ணு சிறு வயது முதலே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். சிறு வயதில், தனது நண்பனை நரபலி கொடுத்ததன் விளைவாக கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து குடியில் வாழும் நாயகி  ப்ரீத்தி முகுந்தனை காதலிக்க அதன் விளைவாக  பெரிய பகையை சம்பாதிக்கும் விஷ்ணு மஞ்சுவை, ஊரில் இருந்து விலக்கி வைக்கிறார் சரத்குமார்.
இதனையடுத்து  வாயு லிங்கத்தை அபகரிக்க நடக்கும் போரில் அதை காப்பாற்ற சண்டையிடும் சரத்குமார் கொல்லப்படுகிறார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க விஷ்ணு மஞ்ச எதிரிகளுடன் சண்டை  இடுகிறார்.

இறுதியில் போரில் விஷ்ணு மஞ்ச்சு வெற்றி பெற்றாரா? இல்லையா? கடவுளே இல்லை என்று கூறும் விஷ்ணு எப்படி தீவிர சிவன் பக்தர் ஆனார் என்பதே  ’கண்ணப்பா’  படத்தின்கதை.
தின்னன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மஞ்ச கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், வீரம் , கருணை என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் ப்ரீத்தி முகுந்தன் கண்களாலே பேசுகிறார். காதல், வீரம் .பாசம் என கொடுத்த வேலை சரியாக செய்து அனைவரின் கவனத்தை பெறுகிறார்.

மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, கிராத்தா என்ற வேடர் குல வீரராக நடித்திருக்கும்  மோகன்லால்,ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ், சிவனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் மற்றும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால்,விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்திருக்கும் சரத்குமார் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை  பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. நியூசிலாந்தின் இயற்கை அழகை அழகாக படமாக்கியிருக்கினார் ஷெல்டன் சான்
கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாறை மையக்கருவாக வைத்து ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்  முகேஷ் குமார் சிங்  இத்திரைப்படத்தை காதல், வீரம் ,பக்தி  கலந்து கொடுத்திருக்கிறார்.

நடிகர்கள் : விஷ்ணு மஞ்சு, மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், ப்ரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால், மோகன் பாபு, ஆர். சரத்குமார், மதுபாலா
இசை : ஸ்டீபன் தேவஸீ 
இயக்கம் : முகேஷ் குமார் சிங்  
மக்கள் தொடர்பு : ஹஸ்வந்த்

Comments

Popular posts from this blog