’மார்கன்’  - விமர்சனம்
சென்னையில் இளம் பெண் ஒருவர் மீது மர்ம மனிதர் விஷ ஊசி போட  உடல் முழுவதும் கருப்பாக மாறி அந்த பெண் இறந்துவிட பிணத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறார்.  இதனையடுத்து இந்த வழக்கை போலீஸ் விசாரிக்கிறது.

மும்பையில் வசிக்கும் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி இளம்பெண் மரண செய்தி குறித்து  செய்தித்தாள் மூலம் அறிய    அதிர்ச்சி அடைகிறார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து  விசாரிக்க சென்னை வருகிறார் விஜய் ஆண்டனி
சென்னை போலீஸ் உயர்அதிகாரியான சமுத்திரக்கனி, இந்த வழக்கு குறித்து விசாரிக்க விஜய் ஆண்டனிக்கு அனுமதி வழங்குகிறார்.  விஜய் ஆண்டனி, தனக்கு  கிடைத்த தடயங்கள் மூலம் அஜய் தீசனை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால், அவரது விசித்திரமான செயல்கள் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

மறுபக்கம் அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்படுகிறார்.  இறுதியில் உண்மையான கொலையாளி யார் ? அஜய் தீஷனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உண்டா? இல்லையா? உண்மையான கொலைகாரனை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’மார்கன்’  படத்தின் கதை.
 
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி ரசாயன  ஊசியால் மக்களை பறிகொடுத்த தந்தையாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கொலைகாரனை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அஜய் திஷானுக்கு இது முதல்படம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். துடிப்பான இளைஞராக படம் முழுவதும் வருகிறார்.
போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என படைத்ததில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை  படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.  எஸ்.யுவாவின்  ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

ஒரு சஸ்பென்ஸ்  க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்  லியோ ஜான் பால்  திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத விதத்தில் விறுவிறுப்பாக திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமசந்திரன், பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி 
இசை : விஜய் ஆண்டனி
இயக்கம் : லியோ ஜான் பால்  
மக்கள் தொடர்பு : ரேகா

Comments

Popular posts from this blog