Posts

Showing posts from October, 2022
Image
*'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ஹரோம் ஹரா'* *'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் 'ஹரோம் ஹரா' படத்தின் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியீடு* 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப்
Image
*நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது* - *நடிகர் அசோக் செல்வன் வியப்பு* *நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக்கம் ஏற்படும்* - *இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை* வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார் வணிக வ ளாகத்தில் ந
Image
படவெட்டு’ (மலையாளம்)  -  விமர்சனம் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள மல்லூர் கிராமத்தில் விளையாட்டு வீரராக இருக்கும்  நாயகன் நிவின் பாளி எதிர்பாராத விபத்தால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்குகிறார். விவசாயத்தை நம்பியிருக்கும் அந்த கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். இதற்கிடையே, மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சியின் தலைவர், ஷம்மி திலகன் அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். இறுதியில் நிவின் பாலி, அரசியல்வாதிக்கு எதிராக எடுக்கும் முடிவு என்ன ? என்பதே  ’படவெட்டு’  படத்தின்  கதை. நாயகன்  நிவின்பாலி கிராமத்து இளைஞராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அமைதியாக ஆழமான நடிப்பு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.  இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எல்லாவற்றையும் நேர்மறையாக்கிவிடுகிறது. நாயகி அதிதி பாலன்  காதலை கண்களிலேயே வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு. குய்யாலி என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷம்மி திலகன்.வில்லத்தனத்தில்  மிரட்டுகிறார். ந
Image
காலங்களில் அவள் வசந்தம்’ – விமர்சனம் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறார் நாயகன் கௌஷிக்  தன்   காதலை ஹெரோஷினியிடம்  சொல்ல இருக்கும் போது. நாயகனின் அப்பா நெருங்கிய நண்பரின் மகள் அஞ்சலி நாயர் நாயகன் வீட்டிற்கு வருகிறார்  அப்போது  நாயகன் மீது காதல் கொள்கிறார். அவரை திருமணமும் செய்துக்கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு நாயகன் கௌஷிக் மனைவியை காதலிக்கிறார். ஆனால், அஞ்சலியோ உன்னுடைய காதல் செயற்கைத்தனமாக இருக்கிறது, மனதளவில் நீ காதலிக்கவில்லை, என்று சொல்லிவிடுகிறார்.  இறுதியில் நாயகன் மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா?  இல்லையா ? என்பதே  ’காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் கதை. அறிமுக  நாயகன்  கௌஷிக் ராம் முதல் படம் என்று நம்ம முடியாத அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரைக்கும் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அஞ்சலியை காதலிக்கவும் முடியாமல் காதலி ஹீரோஷினியை கைவிடவும் முடியாமல் கௌஷிக் படும் பாடு எதார்த்தமாக இருக்கிறது. நாயகி அஞ்சலி நாயர், மிக அழகாக இருக்கிறார். இப்படம் ஒரு
Image
*தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் 'காந்தாரா'* நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா' தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது. 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களி
Image
*இயக்குநர் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா நம்ம மதுரையில் ஆஹா 100% தமிழ் நடத்தியுள்ளது* ஆஹாவின் பிரம்மாண்ட படைப்பான ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் ட்ரைய்லர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் டைட்டில் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ‘பேட்டைக்காளி’யின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், ‘பேட்டைக்காளி’யின் உலகத்திற்குள்ளே பார்வையாளர்களை அழைத்து செல்லும் விதமாக ஃப்ர்ஸ்ட் க்ளிம்ப்ஸ்ஸூம் அங்கு திரையிடப்பட்டது.  ‘பேட்டைக்காளி’ ஆஹா தமிழில் இந்த மாதம், அதாவது அக்டோபர் 21ம் தேதியில் அதன் முதல் எபிசோட் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் வெளியாக உள்ளது. இனிவரும் வாரங்களில் வெளியாகும் எபிசோட்கள் அனைத்தும் நிச்சயம் பார்வ
Image
*‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா'  படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு* *‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு* மெகா ஸ்டார் சிரஞ்சீவி - மாஸ் மகாராஜா ரவிதேஜா - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வால்டேர் வீரய்யா' எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் 'மெகா 154' என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, 'வால்டேர் வீரய்யா' என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் தயாராகும் 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசர், சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இதில் பெர
Image
*'தி ஐ' எனும் சர்வதேச திரைப்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்* *ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் 'தி ஐ'* உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர்,  பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் 'தி ஐ' எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன்  கலந்து கொண்டிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், 'டிரெட்ஸ்டோன்' எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் இசை திறமையால் உலகம்
Image
சபரிமலை மேல் சாந்தி, "ஶ்ரீ சபரி ஐயப்பன்" திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்! ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் "ஸ்ரீ சபரி ஐயப்பன்".  தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தை நட்பின் நூறாம் நாள் திரைப்பட இயக்குனர் ராஜா தேசிங்கு இயக்குகிறார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகம் ராஜாசாமி மிரட்டி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சாம்ஸ் முத்துக்காளை
Image
பிரின்ஸ் - விமர்சனம் பாண்டிச்சேரி அருகில் இருக்கும் தேவனக்கோட்டை பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் சிவகார்த்திகேயன், அங்கு ஆங்கிலஆசிரியராக வேலைக்கு சேரும் பிரிட்டிஷ் பெண் மரியா மீது காதல் கொள்கிறார். மரியாவும் அவருடைய காதலை ஏற்றுக்கொள்ளகிறார்., சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திரப் போராட்ட குடும்பம் என்பதால் அவரின் அப்பா சத்யராஜ் பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கிடையில் ஊர் மக்களும் ஒன்று  திரண்டு சிவகார்த்திகேயனை ஊரை விட்டு வெளியேறச் சொல்லுகிறார்கள்.  இறுதியில் சிவகார்த்திகேயன், - மரியா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா" இல்லையா? என்பதே  ‘பிரின்ஸ்’  படத்தின் கதை. நாயகன் சிவகார்த்திகேயன் காமெடி பாணியை இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார்  காதல்,, ஆக்ஷன், நடனம், ரொமான்ஸ் என  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் உக்ரைன் நாட்டு நடிகை மரியா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆங்கிலம் கலந்த தமிழுடன் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. சிவகார்த்திகேயனின் அப
Image
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, தங்களது அடுத்த படைப்பான #KD- The Devil படத்தின் டைட்டில் டீசரை பெங்களூரில் பிரமாண்டமாக வெளியிட்டது! 2022 தென்னிந்தியாவின் வெற்றிகரமான  வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851 கோடிகளைத் தாண்டி அனைவரும் வியக்கும் வண்ணம், கன்னட திரையுலகம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையாக மாறி நிற்கிறது !  கன்னட திரையுலகில் KVN Productions, தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது. இவர்களின் 4வது திரைப்படம் பெங்களூரில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமான, “KD-The Devil” டைட்டில் இப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப்பட்டது. பெங்களூரு ஓரி
Image
சர்தார் - விமர்சனம் சர்தார் ( அப்பா கார்த்தி)  ராணுவ உளவாளியாக இருக்கிறார். அவரை தேசத்துரோகி என்று இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார். இதனால் அவருடைய குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. முப்பது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் காவல் துறை அதிகாரியாக வலம்வருகிறார் சர்தாரின் மகன் விஜய பிரகாஷ்  ( மகன் கார்த்தி). தேசத்துரோகியின் மகன் என்னும் அவப்பெயரிலிருந்து விடுபடுவதற்காக காவல் துறை அதிகாரியாக தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெறவைக்கிறார் . இதற்கிடையே பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் குடிநீர் தனியார் மயக்கமாக்குவதை எதிரத்து  போராடி வரும் லைலா.மர்மமான முறையில் இறக்கிறார். அவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க விஜய் பிரகாஷ் (மகன் கார்த்தி) முயற்சி செய்யவே பல அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிந்து கொள்கிறார். லைலா மரணத்திற்கு காரணம்  என்ன ?   சர்தார் கார்த்திக் செய்த தவறு என்ன? என்பதே  சர்தார்’ படத்த்தின் கதை. நாயகன் கார்த்தி இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறார் அதிலும் வயதான வேடத்துக்குக் கூடுதலாக சிற
Image
*நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'வீர சிம்ஹா ரெட்டி'* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு 'NBK 107' என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர். 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் தலைப்பு ஆக்க்ஷன் என்டர்டெய்னர் ஜானருக்கு பொருத்தமானது. பாலகிருஷ்ணாவ
Image
*Moviewood OTT தளத்தின் தீபாவளி கொண்டாட்டம்* *தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள்* புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது.  தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில்  'காலேஜ் டேஸ்' & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் 'A ஸ்டோரி' ஆகிய  இரண்டு  வெப் சீரிஸ்-களையும், ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புத்தம் புதிய ப்ளாக் காமெடி படமான  'லொஜக் மொஜக் பஜக்' எனும் திரைப்படத்தையும்  வெளியிடுகிறது. 1. A story பப்பி என்கிற ஒரு விலைமாதுவின் வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த வெப் சீரீஸ். விலைமாதுவாகவே இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே?. அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்காதா என்ன?. அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களின் உலகம் என விரிகிறது இந்த பத்து எபிசோட் வெப் சீரீஸ். இது ஒரு அடல்ட்
Image
*பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பு 'அம்மு'* *ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான 'அம்மு' திரைப்படம், பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன் போது பட குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.* ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான 'அம்மு' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, இப்படத்தை பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பிரைம் வீடியோவில் திரையிட திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் பிரத்யேக திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பிரிமியர் காட்சிக்கு 'அம்மு' படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் அமைந்திருக்கும் ஏ எம் பி சினிமாஸ் எனும் திரையரங்க வளாகத்திற்குள் ப்ரைம் வீடியோ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்