நீ ஃபார் எவர்’ ( Nee Forever) -3.5/5விமர்சனம்
நீ ஃபார் எவர்’ ( Nee Forever) - விமர்சனம் ஓய்.ஜி. மகேந்திரnவின் மகள் தான் காதலித்தவருடன் வீட்டை வீட்டு ஓடிவிடுகிறார். பல வருடங்கள் கடந்த நிலையில் கையில் ஒரு பெண் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக மீண்டும் அப்பா வீட்டிற்கே வருகிறார். இதன் பிறகு இவர்கள் தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்கள். இதையடுத்து சென்னைக்கு வரும் சுதர்சன் கோவிந்த் ஆப் டெவலப்பராக முயற்சிக்கிறார். காதலர்களுக்காக ‘நீ ஃபார் எவர்’ என்ற பெயரில் ஒரு சாட்டிங் ஆப் உருவாக்குகிறார். ஆனால் அந்த ஆப் சரியாக அமையாததால் காதல் பற்றி தெரிந்து வர சொல்லுகிறார்கள். மறுபுறம் இயக்குநராக முயற்சிக்கும் நாயகி அர்ச்சனாவிற்கு ஒரு நிறுவனம் காதல் கதை கொண்டு வந்தால் படம் பண்ணலாம் என்று கூறுகிறது. இந்நிலையில் சுதர்சன் , அர்ச்சனா இருவரும் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறாகள். இதே சமயம் தாத்தா ஓய்.ஜி பேரனுக்காக பெண் ஒன்றை பார்த்து நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் நாயகன் சுதர்சன் தாத்தா பார்த்த பெண்ணை திருமணம் செய்த...