Enemy Of the Smuggler Movie Review
Enemy Of the Smuggler Movie Review
சமய முரளி இயக்கத்தில்
JD சக்ரவர்த்தி, ராதிகா சரரத்குமார், லால், சரண் சக்தி, பாலசரவணன் ஸ்மேகா, காளிவெங்கட், ஜாபர் சாதிக், மைம்கோபி, சமய முரளி மற்றும் பலர் நடித்து அக்டோபர் 30 ல் வெளியிகும் படம்
Enemy Of The Smuggler.
கதை
சரண் சக்தி தன் அம்மா ராதிகா சரத்குமாருடன் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வீட்டுக்கு வாடகை கட்டமுடியாத சூழ்நில ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில்
குடும்பச் சூழ்நிலை காரணமாகக் குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நண்பர் பால சரவணனுடன் பிரபல கடத்தல் மன்னனான ஜே.டி. சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் செல்கின்றனர். ஆரம்பத்தில் பணத்துக்காகத் தொடங்கும் இந்தக் கடத்தல் தொழில், நாளடைவில் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஆபத்தான பாதையாக மாறுகிறது. அதே சமயம் காதலித்த ஸ்மேகாவை கல்யாணமும் செய்துகொள்கிறார். தான் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பது காதல் மனைவி ஸ்மேகாவுக்குத் தெரியவர, வேறு வழியின்றித் தொழிலைக் கைவிட நினைக்கிறார் சரண். ஆனால், அந்த முடிவே அவருக்குப் புதிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்கக் களமிறங்குகிறார் காவல்துறை அதிகாரி சமய முரளி. ஒருபுறம் கடத்தல் கும்பலின் ஆபத்துகள், மறுபுறம் காவல் அதிகாரி சமய முரளியின் கெடுபிடி இரண்டிலும் சரண் சிக்கித் தவிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது? 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதா? சரணின் காதல் வாழ்க்கை என்னவானது? கடத்தல் கும்பல் காவல்துறையிடம் சிக்கியதா? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதே படத்தின் கதை
கதாநாயகனாக சரண் சிறப்பாக நடித்துள்ளார். சரண் காதலியாக ஸ்மேகா நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
சரணின் தாயாக ராதிகா சரத்குமாரின் நடிப்பும் அருமை.
போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காகத் திட்டமிட்டு வியூகம் அமைக்கும் காவல்துறை அதிகாரியாக சமய முரளி சிறப்பாக நடித்திருக்கிறார்.
சரணின் நண்பராக பால சரவணன் நடிப்பும் அருமை. ஸ்மேகா அண்ணனாக காளி வெங்கட் நடிப்பும் அருமை.
வில்லனாக JD சக்ரவர்த்தியின் நடிப்பு மிரட்டல்.
ஜாபர் சாதிக், மைம் கோபி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் டேனியல் இசை ரசிக்கவைக்கிறது. KA WIN Badkar ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
கடத்தல் தொழிலின் பின்னணியில் காதல், குடும்பம், போலீசின் அதிரடி நடவடிக்கைகள் என காதல் கிரைம் திரில்லர் கதையை பிண்ணனி இசையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் சமய முரளி.
Comments
Post a Comment