ராமாயணா சினிமா விமர்சனம் :​  உலக சினிமாவை வியக்க வைக்கும் இந்தியக் காவியம்​ | ரேட்டிங்: 4.5/5/ராமாயணாMivie-சினிமா-விமர்சனம/Review

இராமாயணம் திரை விமர்சனம்
நமீத் மல்கோத்ரா தயாரிப்பில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ஷோபனா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள இராமாயணம் திரைப்படம் பிரம்மிப்பின் உச்சமாக உருவாகி வெளியாகியுள்ளது.

 கதை

 தங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் திவாரி பாலிவுட்டிலும் ஒரு ராஜமெளலி இருக்கிறேன் என நிரூபித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடைபெறும் போரில் ராவணனின் அம்மா (ஷோபனா) சண்டை செய்து தோற்றுப் போகிறார். அதற்கு பழிவாங்க விஷ்ணுவையே அழிக்கும் அளவுக்கு வீணை வாசித்துக் கொண்டிருக்கும் தனது மகனை உசுப்பேற்றி விட கடும் தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்க, அதற்கு பதில் என்ன வேண்டுமானாலும் கேள் என்றதும் மனிதரை தவிர்த்து வேறு எந்த சக்தியாலும் தனக்கு அழிவு நேரக் கூடாது எனக் கேட்க, மனித உருவத்திலேயே ராமராக அவதரித்து முடி சூடாமல் கைகேயிக்கு தசரதன் கொடுத்த வாக்கிற்காக வனவாசம் வரும் இடத்தில் அன்பு மனைவி சீதையை சூர்ப்பனகை மூக்கை லட்சுமணன் அறுத்த காரணத்திற்காகவும் ராமனுடன் போருக்கு அரைகூவல் விடுக்கவும் கடத்திச் செல்வதும் அதற்காக மூவுலகையும் ஆளும் ராவணனை பழிவாங்குவேன் என ராமன் சபதம் எடுப்பதே இந்த இராமாயணம் படத்தின் முதல் பாகக் கதை.
ராமராக  ரன்பீர் கபூர்  ராமராகவே வாழ்ந்திருக்கிறார். சீதையாக சாய் பல்லவி சிறப்பாக நடித்திருக்கிறார். ராவனனாக யஷ் நடிப்பில் மிரட்டியுள்ளார்.  ஷோபனா நடிப்பும் அருமை. 
ராவணன் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பும் அருமை.
ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.
ஆக்‌ஷன் காட்சிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், மிருகங்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கும் அவதார் படத்துக்குமே சவால் விடும் அளவுக்கு இருப்பதற்காகத்தான் அத்தனை கோடிகளை கொட்டியுள்ளனர் என்பது தெரிகிறது. 3டி வடிவிலும் படம் நின்னு பேசுகிறது. தமிழ் டப்பிங் லிப் சின்க் எல்லாம் எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கே உள்ளது. வசனங்களும் தூய தமிழில் இருந்தாலும், நச்சென இருப்பது படத்தை எந்தவொரு இடத்திலும் தொய்வடைய செய்யவில்லை. அவசியம் குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்து சென்று பார்க்க வேண்டிய படம். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4.5/5 Done

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie