சீன் சினிமா விமர்சனம் : சூர்யா! மிரட்டலான டார்க் ஹ்யூமர் த்ரில்லர்!! | ரேட்டிங்: 4/5சீன்-சினிமா-விமர்சனம்/

சீன் திரைவிமர்சனம்
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்து தீபாவளி படமாக வெளிவந்திருக்கும் படம் சீன்.
கதை 
டிஎஸ்பி இன்பராஜ் (சூர்யா) காவல்துறையை ஏமாற்றிவிட்டு பர்ஃப்யூம் கில்லரை பிடித்ததாக வேறு ஒரு ஆளை குற்றவாளியாக்கி விட்டார் என்றும் அவர் மீது புகார் தெரிவிக்க வேண்டும் எல்லோரும் புகார் மனுவில் கையெழுத்து போடுங்கள் என ஒரு போலீஸ் அதிகாரி துடிக்கிறார். அதற்கு மற்றவர்கள் அதற்கு மறுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் வேலையை விட்டு விலகிச் செல்வதாக உயர் அதிகாரி லாலிடம் இன்பராஜ் சொல்ல, அதற்கு முடியாது எனக் கூறும் லால், டோவினோதாஸ் மூலம் இன்பராஜ் பற்றி ஒரு விஷயம் தெரிந்ததும் அவரை ராஜினாமா செய்ய சொல்கிறார் லால். ஆனால், இன்பராஜ் மறுத்து தான் பிடித்த சைக்கோ கில்லரான பர்ஃப்யூம் கில்லர் பேட்டர்னில் யாரோ ஒருவன் கொலை செய்கிறான்.அதை கண்டு பிடித்தே தீருவேன் என இன்பராஜ் சொல்ல இன்பராஜை போலிஸ் கண்காணிக்கிறது.

ஈஸ்வரன் (நஸ்லென்) கான்ட்ராக்டர் கில்லராக செயல்படுவதை அறிந்ததும் இன்பராஜ் தன்னுடைய குறைகளை சமாளித்து எப்படி ஈஸ்வரனை இன்பராஜ் பிடித்தார் என்பது தான் சீன் படத்தின் கதை.
சூர்யா இன்பராஜ் கதாபாத்திரத்தில் முதல் சீனில் இருந்து  கிளைமேக்ஸ் வரை நடிப்பில் பிச்சி உதறியுள்ளார். சூர்யாவுக்கு உதவியாளராக நடித்துள்ள நஸ்ரியா இன்னமும் செம அழகாகவும் இருப்பதோடு நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.
நஸ்லான் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நல்ல நடிகர் இண்டலிஜண்ட் சைக்கோவாக தன் அலட்டலே இல்லாத நடிப்பில் அடி தூள் கிளப்பிவிட்டார்.
ஆனந்தராஜ்,கஜராஜ், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன், கேமியோவாக டோவினோ தாமஸ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். 
சுஷின் சியாமின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

சூர்யாவின் அப்பாவாக ஆனந்த்ராஜ் மறதி வியாதியுடனும் அம்மா சாராயம் காய்த்து குடிக்கும் பெண்ணாக வருவதும், கை நடுக்கம், வலிப்பு நோய் கொண்ட நஸ்ரியா என ஒரு படு மொக்கையான டீமை வைத்துக் கொண்டு இன்பராஜ் எப்படி ஈஸ்வரனை பிடிக்கிறார் என்பதை இயக்குநர் நன்றாக திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி சவாராஸ்யமாக சொல்லியுள்ளார்.
மதிப்பெண் 4/5

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie