மூக்குத்தி அம்மன் 2 திரைவிமர்சனம் MoviRevie w மதிப்பெண் 4/5
மூக்குத்தி அம்மன் 2 திரைவிமர்சனம்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் அவ்னி மற்றும் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில்
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி, ரெஜினா i ko, ஊர்வசி, குஷ்பு, சினேகா, யோகி பாபு, இனியா, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய் மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகியுள்ள படம் மூக்குத்தி அம்மன் 2
கதை
சென்னையில் சாதாரண காவல் அதிகாரியாக இருக்கும் நயன்தாராவை மயிலாஞ்சிக்குப் போ என அவரது கனவில் ஏகப்பட்ட உருவங்கள் வந்து சொல்ல, சிறுமியை நிதின் சத்யா நரபலி கொடுக்க முயலும் போது அதை தனியாளாக தடுக்கும் நயன்தாராவுக்கு பெரிய புரமோஷன் கிடைக்க வாய்ப்புகள் கை கூடி வந்த நிலையிலும், இன்னொரு பெண் அதிகாரி மைலாஞ்சி ஊருக்கு டிரான்ஸ்பர் கேட்க அந்த இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு செல்கிறார்.
இதற்கிடையில் மயிலாஞ்சியில் 2,000 ஆண்டுகளாக ஜீவசமாதி அடைந்திருக்கும் ரெஜினாவை தீயவர்கள் கூடாரம் தங்களது மந்திர சக்தி மூலம் மீண்டும் உயிர்பிக்கிறார்கள். நயன்தாரா அந்த ஊருக்கு வந்ததை அறிந்த ரெஜினா, நயன்தாராவை பழிதீர்க்க துடிக்கிறார். அவரை பலி கொடுக்கவும் விரும்புகிறார்.
நயன்தாரா யார்?
நயன்தாராவை கொலை செய்ய ரெஜினா துடிப்பது ஏன்? ரெஜினாவின் சதித்திட்டம் பலித்ததா? நயன்தாரா தப்பித்தாரா? என்பதே பரபரப்பான படத்தின் கதை.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாரா, அம்மன் வேடத்தில் மிகச் சிறப்பாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார்.
ரெஜினா கசான்ட்ரா, துனியா விஜய் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஊர்வசி, யோகி பாபு கூட்டணியில் ஆங்காங்கே வரும் காமெடிகள் ஓரளவு பரவாயில்லை.
குஷ்பு, சினேகா நடிப்பும் பாடலும் மெய்சிலிர்க்கவைக்கிறது.
YG மகேந்திரன், இனியா, வெங்கட் ராகவன்,சிங்கம் புலி, சுனில் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
முதல் பாதி விறுவிறுப்பாகவும், சிலிர்ப்பூட்டும் தருணங்கள், மாஸ் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை உயர்த்தி காட்டும் காட்சிகளுடனும் அமைகிறது. இரண்டாம் பாதியில் வரும் பின்னணிக் கதையை சுவாரசியமாக சொல்லி கிளைமாக்ஸ் பாடலை பரபரப்பாக்கி எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி..
மதிப்பெண் 4/5
Comments
Post a Comment