#Haiku 4/5ஒரு காதலன், இரண்டு காதலி. இரண்டு ஊர் , நட்பு, பிரிவு , சண்டை என யூத்புல்லாக செல்லும் கதை. ஹீரோ, ஹீரோயின் நடிப்பு,
Haiku Movie Review
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில்
ஏகன் நாயகனாக நடிக்க, நாயகிகளாக ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில்
உருவாகி அக்டோபர் 23 ல் வெளியாகும் படம் ‘ஹைக்கூ’.
கதை
ஹீரோ ஏகன் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். அங்கு அவர் வாழ்வில் ஒரு பெண் வருகிறார். அவரின் வருகைக்குப் பிற்பாடு ஏகன் வாழ்வில் ஆல்ரெடி ஒரு பெண் இருந்துள்ளாள் என்பது தெரியவருகிறது.
பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.
ஏகன் கல்லூரியில் படிக்கும்போது பெண்கள் டாய்லெட்டில் உள்ளே சென்று வந்ததை நண்பர்கள் படமெடுத்து அதை வாட்சப் குரூப்பில் போட அதனால் ஏகன் சஸ்பெண்ட் செய்யப்பட வேறு கல்லூரிக்கு முயற்சி செய்து சேருகிறார். அந்த கல்லூரியில் இவரைத்தவிர ஆண்கள் இல்லை. இப்படிபட்ட சூழ்நிலையில் கதாநாயகியை ஒரு பிரச்சினையில் காப்பாற்ற நண்பர்களாகி காதலர்களாகின்றனர். இந்த காதல் பிரேக்கப் ஆகிறது. பின் வேலை செய்யும் இடத்தில் மற்றொரு பெண்ணை காதலிக்க அந்த காதலும் பிரேக்கப் ஆகிறது. இப்படி காதலில் தொடர்ந்து சிக்கல் உருவாகுவதற்கு யார் காரணம்? யார்மீது தவறு? ஹீரோ மீதா? அவரை காதலிக்கும் ஹீரோயின்கள் மீதா? என்பதை பீல்குட் மூவியாக சொல்லிருப்பதே படத்தின் கதை.
ஹீரோ ஏகன் கல்லூரி மாணவனாக நன்றாக நடித்திருப்பதோடு அதன் பிறகு நடக்கும் வாழ்க்கை யதார்த்தத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகிகளாக ஸ்ரீதேவி அப்பல்லா, பெமினா ஜார்ஜ் இருவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
நண்பர்களாக நடித்தவர்கள், ஸ்ரீதேவி அப்பா, அம்மா, அக்கா, மாமா என இதில் நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
சித்துக்குமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவும் அருமை.
ஒரு காதலன், இரண்டு காதலி. இரண்டு ஊர் , நட்பு, பிரிவு , சண்டை என யூத்புல்லாக செல்லும் கதை. ஹீரோ, ஹீரோயின் நடிப்பு, இசை பிளஸ். காதலர்களுக்கு இடையே உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகளை பேசுகிறது. கிளைமாக்ஸ் பீலிங்.
இன்றைய கல்லூரி காதலில் இருக்கும் இன்ட்ரெஸ்டிங்கான விஷயத்தை எடுத்து
இரண்டு விதமான காதலை நுணுக்கமாக
அதை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுளளார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி. .
மதிப்பெண் 4/5 #Done
Comments
Post a Comment