Drones Movie Review குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான எண்டர்டெய்னர்.

Drones Movie Review .குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான எண்டர்டெய்னர். RATING: 4/5 ⭐
ஜி எம் மோர்கன் பிலிம்ஸ் ஜி எம் மோர்கன் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில்  டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படப் “ட்ரோன்ஸ்”. 
கதை 

டிராவிட் செல்வம் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் வெளியே வர போலிஸ் அதிகாரியான சினிமாவாலா சதீஷிடம் மாட்ட அவர்கள் நண்பர்கள் இருவரும் சப்போர்ட் செய்ய மூவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து மாணவர்கள் என்பதால் விட்டுவிடுகிறார். இத்த விஷயம் தெரிந்த கல்லூரி நிர்வாகம் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் தீபக் மூவரையும்  இடைநீக்கம் செய்யப்பட்டுகிறார்கள். அதன்பிறகு பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் மூவரும் தங்க சென்ற இவர்கள் அங்கு மாட்டிக்கொள்கிகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது ஏஞ்சல் சித்தி இத்னானி கண்டு காதல் கொள்கிறார் டிராவிட் செல்வம். இந்த காதலை பாட்டி சூனியக்காரக் தேவதர்ஷினி எதிர்க்கிறார். அத்துடன் அம்மூவரையும் தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார் தேவதர்ஷினி. இதற்கிடையில்  நகரில் மர்ம கொலைகள் நடக்கின்றன.  அதை போலீஸ் துப்பறிய முயல்கிறது. சூனியக் கிழவியிடம் சிக்கிய நண்பர்கள் என்ன ஆனார்கள்?. நகரில் நடக்கும் கொலைகளுக்கு யார் காரணம் என்பதை கலகலப்பாகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படமே டி
ட்ரோன்ஸ்.
கதையின் நாயகனாக டிராவிட் செல்வம் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி ஏஞ்ஞலாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மற்றொரு காதலியாக அஞ்சலி நாயர் நடிப்பும் அருமை. 
போலிஸ் இன்ஸ்பெக்டராக சினிமாவாலா சதீஷ் சிறப்பாக நடித்துள்ளார். சூனியக்காரி கிழவியாக தேவதர்ஷினி நடிப்பில் மிரட்டியுள்ளார். 
குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹரி எஸ்.ஆரின் இசை ரசிக்கவைகாகிறது.  ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு  படத்திற்கு பெரிய பலம்.
சிறுவயதில் படித்த காமிக்ஸ் கதைகள், பறக்கும் தட்டு, சூனியக்கிழவி  என்ற கற்பனை கதையை எல்லோரும் ரசிக்கும்படி  சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 
குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான எண்டர்டெய்னர்.
மதிப்பெண் 4/50

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie