பருந்து திரைவிமர்சனம்
பருந்து திரைவிமர்சனம்
அழகுமலை இயக்கத்தில் அழகுமலை, V R விநாயக், மாரிமுத்து, மன்சூரலிகான், பேரரசு, சென்ட்ராயன், அப்புகுட்டி மற்றும் பலர் நடித்து அக்டோபர் 9 ல் வெளியாகும் படம் பருந்து.
கதை
மாரிமுத்துவுக்கு இரண்டு மகள். மூத்தபெண்ணுக்கு திருமணம் நடக்க இருக்கும் சூழ்நிலையில் படித்துக்கொண்டிருக்கும் இரட்டாவது மகளை தன் டிரைவர் இழுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார். இந்த விஷயம் தெரிந்தால் தன் மகள் கல்யாணம் கேள்விக்குறியாகிவிடும் என நினைத்து தன் நண்பரான தலைவர் அழகுமலையை சந்தித்து நிலமையை சொல்கிறார். அதற்கு அழகுமலை அவர்கள் இருக்கும் இடத்தை கணடுபிடித்து உன் இளைய மகளை பத்திரமாக அழைத்து வருகிறேன். நீங்க கல்யாண வேலையை பாருங்க என்று சொல்லிவிட்டு விநாயக் உதவியுடன் ஓடிப்போனவர்களை தேடுகிறார். ஓடிப்போன பெண்ணை கண்டுபிடித்து மாரிமுத்துவிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? ஓடிப்போன பெண்ணை மன்சூரலிகான் கண்டுபிடித்தபின் என்ன செய்தார்? மன்சூரலிகானிடம் இருந்தும் அந்த பெண்ணை உயிருடன் மீட்டாரா? என்பதே படத்தின் மகதை.
VR விநாயக் கதையின் நாயகனாக நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது காதலியாக நடித்தவரும் சிறப்பாக நடித்துள்ளார். வழக்கறிஞராக இயக்குநர் பேரரசு,மன்சூரலிகான், மாரிமுத்து, சென்ட்ராயன், அப்புக்குட்டி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
காசிவிஸ்வநதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பரிய பலம். ஜேம்ஸ்ருபர்ட்டின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் அழகுமலை தலைவராக நடித்ததோடு மட்டும் அல்லாமல் படத்தை தயாரித்து கதை பாடல் எழுதி இயக்கி எல்லோரும் ரசிக்கும்படியான படத்தை சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
மதிப்பெண் 3.5/5
Comments
Post a Comment