ஏன் என்னை ஏதோ செய்தாய்திரை விமர்சனம் YenEnnaiEdhoSeidhai - 3./5

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரை விமர்சனம்
D ஆண்டனி இயக்கத்தில் ஆண்டனி, மதுமிதா தாஸ்,  ஜீவா ரவி, ரெஜின்  ரோஸ், ஆலம் ஷா நவ்யா சுஜி, மாதங்கி சதிஷ், ரியா மனோஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஏன் என்னை ஏதோ செய்தாய். 
கதை 

கார்த்திக் தன் நண்பர்களோடு  ஜாலியாக இருப்பதோடு  திருமணம் செய்து கொள்ளாமல் மது பழக்கத்துடன் கால் கேர்ளுடன்  சந்தோஷமாக  வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மது எனும் கால் கேளைச் சந்திக்கும் கார்த்திக்கிற்கு அவள் மீது காதல் வருகிறது. மதுவும் கார்த்திகை விரும்ப இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். குடிப்பழக்கம்  உள்ள கார்த்திக் போதையில் மதுவை தவறான வார்த்தையில் பேசிவிட  கோபத்தில் கார்த்திக்கை விட்டு மது பிரிந்து செல்கிறாள். அவள் பிரிவு கார்த்திக்கை  என்ன செய்கிறது? அதிலிருந்து கார்த்திக் மீண்டாரா?  இல்லையா? என்பதே  படத்தின் மீதிக்கதை.
கார்த்திக் கதாபாத்திரத்தில் ஆண்டனி நடித்திருக்கிறார் என்பதை விட அந்த கேரக்டராகவேவாழ்ந்திருக்ககறார். மது கதாபாத்திரத்தில் மதுமிதாதாஸ் சிறப்பாக நடித்துள்ளார். ஜீவாரவி, ரெஜின்  ரோஸ், ஆலம் ஷா நவ்யா சுஜி, மாதங்கி சதிஷ், ரியா மனோஜ்என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
Jaikar Harinath  இசை ரசிக்கவைக்கிறது. Pietro Villani ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மதுபோதை வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை எல்லோரும் ரசிக்கும்படி  சொல்லியிருக்கிறார் இயக்குநர் D ஆண்டனி.

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie