#TheDarkHeaven 4/5வரிசையாக கொலைகள். அதை செய்வது சாத்தானா? சைக்கோவா? ஆசாமியா? வேறு யாருமா?சஸ்பென்ஸ் நிறைந்த விறுவிறு திரில்லர் படம்.
The Dark Heaven Movie Review
மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். சுவிஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனர் பாலாஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான சித்து சித் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் அறிமுகமான தர்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து செப்டம்பர் 18 அன்று வெளியாகும் படம் the Dark Heaven.
கதை
மலைக் கிராமம் ஒன்றில் தொடர்ச்சியாக மர்மக் கொலைகள் நடந்து வருகிறது. அந்தக் கொலைகளின் பின்னணியை கண்டறிய போலிஸ் அதிகாரியான சித்து மேற்கொள்ளும் விசாரணையே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. இறுதியில் அந்த மர்மத்தின் பின்னணியில் என்ன நடந்தது? தொடர் கொலைகளை யார் செய்தது? என்பதே படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை.
கதாநாயகனாக சித்து போலிஸ் விசாரணை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக பிக்பாஸ் தர்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார். ரித்விகாவின் பாத்திரம் அருமை. நிழல்கள் ரவி, வேலா ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஜானகிராமன், அருள், D. ஷங்கர், பிரதீப், அலெக்ஸ், தோனி தயல் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
சக்தி பாலாஜியின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் பாலாஜி எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமான வெற்றிபடமாக The Dark Heaven .
மதிபபெண் 4/5 SAkthiSaravanPRo
Comments
Post a Comment