Paris Cafe Movie Review
Paris Cafe Movie Review
சரஜ் சீலன் இயக்கத்தில் குருசோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி, நயனா சாய் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பாரிஸ் கஃபே.
கதை
அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் போன்ற சிறந்த தம்பதியை பார்க்க முடியாது, என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, மருத்துவ கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம், அங்கிருக்கும் காஃபே ஒன்றில், மகிழ்ச்சியாக இருக்கும் சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த புகைப்படம் குறித்து விசாரிப்பவர், அவர்கள் பற்றி அறிந்துக் கொண்டு பதட்டப்படுகிறார். அதே பதட்டத்துடன் சென்னை திரும்புகிறவர், தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடி பற்றிய உண்மைகளை சொல்வதோடு, அவர்கள் உயிருடன் இல்லை, என்பதையும் சொல்கிறார்.
குரு சோமசுந்தரம் சொல்வதை கேட்ட பிறகு, பத்திரிகை செய்தி மூலமாக அந்த காதல் ஜோடி பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ளும் அனுமோல், குரு சோமசுந்தரத்தின் மீது கோபமடைந்து, அவரை விட்டு பிரிந்து சென்று விடுகிறார். பெற்றோர் பிரிவு குறித்து அறிந்த மகள் அர்ச்சனா, தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். தனது பெற்றோரை மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, இளம் காதல் ஜோடி யார் ?, அவர்களது இறப்புக்கும் குரு சோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சமூக அக்கறையோடு சொல்வது தான் ‘பாரிஸ் கஃபே’ படத்தின் கதை.
கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் இவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சதீஷ்.ஜியின்
ஒளிப்பதிவு
அமெரிக்கா மற்றும் பாரிஸ் போன்ற வெளிநாடுகளை அழகாக படம் பிடித்துள்ளார்.
கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
ஆணவப் படுகொலையும், அதன் பின்னணி பற்றியும் பேசும் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான பாணியில் கையாண்டு ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் சரஜ் சீலன். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.PRORiyaz@ParasRiazAhmed1
Comments
Post a Comment