தி பாரடைஸ்விமர்சனம் [ The ParadiseMovie Review 3.5/5
[ The ParadiseMovie Review 3.5/5
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தி பிரடைஸ்
கதை
பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள 'பாரடைஸ்' பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கிருக்கும் மக்களைத் தங்கள் சொல்படி ஆட்டிப்படைக்கின்றனர். அதே பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய 'சவாரி' பழங்குடியின மக்கள் தங்களின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்காக சம்மக்கா (சோனாலி குல்கர்னி) தலைமையில் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டக் களத்தின் நடுவே சம்மக்காவுக்கு மகனாக ஜடல் (நானி) பிறக்கிறார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தாலும், ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தனது தாய் சம்மக்கா மீது ஜடல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். சிறு வயதிலேயே மாலிக் குடும்பத்தை எதிர்த்து ஜடல் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.
பாரடைஸ் பகுதியில் சிகஞ்சி மாலிக் குடும்பத்தின் அராஜகங்கள் எவ்வாறு தொடர்ந்தன? அப்பகுதி மக்கள் மீது மாலிக் தரப்பினர் நடத்திய அடக்குமுறைகள் என்னென்ன? சம்மக்காவின் போராட்டத்தை மாலிக் தரப்பு எவ்வாறு ஒடுக்க முயன்றது? ஜடல் எந்த மாதிரியான சூழ்நிலையில் பிறந்தான்? அவனுக்கு 'ஜடல் ஜமானா' என்று ஏன் பெயரிடப்பட்டது? தன் தாய் மீது ஜடல் வெறுப்பு கொள்ளக் காரணம் என்ன? மாலிக்கின் வீழ்ச்சியைக் காண ஜடல் ஏன் துடித்தான்? சுப்பலட்சுமி என்கிற சுப்புவுடன் (கயாடு லோஹர்) அவனுக்கு ஏற்பட்ட காதல் என்ன ஆனது? தாயுடன் ஜடல் இணைந்தானா? மாலிக்கை வீழ்த்த ஜடல் தீட்டிய திட்டம் என்ன? பாரடைஸ் பகுதியில் சவாரி மக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கான பதில்களே பாரடைஸ் படத்தின் கதை
கதாநாயகனாக நானி வித்தியாசமாக ஜடை ஹேர் ஸ்டைல் எல்லாம் போட்டுக் கொண்டு ஜடல் எனும் கதாபாத்திரத்தில்
சிறப்பாக நடித்துள்ளார்.
கயாடு லோஹர் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆபாச பட நடிகையாக வந்து ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். நடிப்பும் அருமை.
நானியின் தாய் கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வில்லனாக மோகன்பாபு மிரட்டியுள்ளார். அனிருத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார்.
ஓளிப்பதிவும் மிரட்டல்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.[ The ParadiseMovie Review 3.5/5
Comments
Post a Comment