#NallaPadam 3.5/5 ⭐️மது பழக்கத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளை நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் நன்றாக connect ஆகிறது.
நல்ல படம் திரைவிமர்சனம்
சி பிரபுராம் இயக்கத்தில் டாக்டர் ஏ ஹரிஷ், கதாநாயகனாகவும் தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் படம் நல்ல படம்.
கதை
மதுவுக்கு அடிமையாக இருக்கும் கதாநாயகன் ஏ ஹரிஷ் என்னாவாகிறார் என்பதே கதை.
மதுவை விரும்பும் சிலரை சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்கி தலைவராக இருந்து பார் நடத்தி வருகிறார் ஹரிஷ். எந்நேரமும் குடிக்கும் ஹரிஷ்க்கு அம்மா ஆதரவாக இருந்தாலும் அவரது சகோதரி குடிக்கும் அண்ணனை வெறுக்கிறார். டாக்டருக்கு படிக்கும் அவரது காதலி அவரை குடியிலிருந்து காப்பாற்றி நல்ல தொழில் செய்ய வைக்க முயற்சிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் அரசு மதுவிலக்கு கொண்டு வருகிறது. மதுவின்றி வாழமுடியாமல் சரக்கு காய்ச்சி குடிக்க பாரினருடன் மொட்டை ராஜேந்திரனுடனும்
முயற்சி செய்கின்றனர் ஹரிஷ் குழு. அது முடியாமல் போக அதன்பிறகு வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும் புதிய சூழலை சமாளிக்க அவர்கள் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே நல்ல படம் படத்தின் கதை.
கதாநாயகனாக டாக்டர் ஹரிஷ் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக தனலட்சுமி நன்றாக நடித்துள்ளார். குடிகாரன் கேரக்டரில் ஆனந்த் நடிப்பும் அருமை. மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சஹிஷ்னா சேவியரின் இசை ரசிக்கவைக்கிறது. இனியன் ஜே ஹரிஷின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்
இயக்குநர் C பிரபுராம் குடி இல்லாத நாடு இருந்தால் மக்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். படக்குழுவினருக்கு #NallaPadam 3.5/5 ⭐️
L
மது பழக்கத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளை நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் அழகாக சொல்லியிருக்கிறது ❤️
குமரனாக நடித்திருக்கும் A. ஹரிஷின் நடிப்பு இயல்பாக இருக்கிறது 👌 குடும்ப காட்சிகளும், சமூக கருத்தும் நன்றாக connect ஆகிறது..
Comments
Post a Comment