கிட்டி திரைவிமர்சனம் MovieReview ரேட்டிங்: 3.5/5
கிட்டி திரைவிமர்சனம்
ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் தயாரிப்பில்
நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில்
அசோக், யுகன்
சங்கவி,
நிஷா,
சிமு அத்வானி,
அரவிந்த் ராஜ், ஓய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்து அக்டோபர் 2ல் வெளியாகும் படம் கிட்டி.
கதை
பட ஓப்பனிங்கில் கதாநாயகன் அசோக் போலிஸ் ஸ்டேஷன் வந்து தான் இரண்டு கொலைகளை செய்ததாக சொல்லி சரணடைகிறார். உண்மையிலேயே அந்த இரண்டு கொலைகளை அவர்தான் செய்தாரா? என்ற விசாரனையை போலிஸ் தொடங்குகிறது. அதன்பின் நடக்கும் சுவாராஸ்யங்களே படத்தின் கதை.
கதாநாயகனாக அசோக் சிறப்பாக நடித்துள்ளார். போலிஸ் விசாரனை அதிகாரியாக யுகன் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக சங்கவி, நிஷா நடிப்பம் அருமை. டாக்டராக அரவிந்த்ராஜ், நீதிபதியாக YG மகேந்திரன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
காதரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு அருமை.
ராக் சங்கரின் நடனம் கார்த்திக் பாண்டியனின் எடிட்டிங்
'பாப்புலர்' பாபுவின் ஸ்டன்ட், ப்ரியன், சீர்காழி சிற்பி,
தமிழ்மகன் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ். எடுத்துக்கொண்ட காதல் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார். ரேட்டிங்: 3.5/5
மக்கள் தொடர்பு - சரண்
Comments
Post a Comment