#மண்டாடி #mandaadi MovieReview4/5#கடல் பின்னணியில், பாய் மர படகு போட்டி கதைகளத்தில் அற்புதமான படம்.
மண்டாடி திரை விமர்சனம்
இன்ஃபோடெயின்மென்ட் பேனர் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், பால சரவணன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மண்டாடி.
கதை
சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார். அவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்தில்
முகவைப்பட்டினம் ஊரில் படகு போட்டி சண்டையால் சாட்டைபுலி(சுஹாஸ்) மகனை, மாரி என்பவர் கொல்ல முயற்சிக்கிறார். இதனால் மாரியை கொல்ல சாட்டைபுலி முயற்சிக்க மாரியை சூரியிடம் தஞ்சம் போக சொல்கின்றனர்.
மாரி தன் முன்னாள் காதலி மகன் என்பதை சூரி தெரிந்துக்கொண்டு பல வருடம் கழித்து தன் ஊருக்கு வந்து மாரி உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என பஞ்சாயத்து பேசுகிறார் சூரி.
அப்போது சாட்டைபுலி அப்படியென்றால் நம்ம இரண்டு வகையறாவும் படகு போட்டி வைத்துகொள்வோம், அதில் தோற்றவர்கள் இனி எப்போதும் போட்டியில் கலந்துகோள்ளக்கூடாது என பேச
அதற்கு சூரி சம்மதிக்கிறார்.
இதன் பிறகு சூரி படகு போட்டியில் மாரியை ஜெயிக்க வைத்து, சாட்டைபுலியை வென்றாரா? சூரிக்கும், சாட்டைபுலிக்கும் இதற்குமுன் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதிக்கதை.
சூரி கதாநாயகனாக நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் படகு போட்டியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவரது காதலியாக மகிமா நம்பியார் நடிப்பு சிறப்பாக நடித்துள்ளார்.
வில்லனாக சுஹாஸ் தெலுங்கு நடிகர் நடிம்பில் மிரட்டியிருக்கிறார். சத்யராஜ் நடிப்பும் கெட்டப்பும் அருமை. பால சரவணன் சுஹாஸ் மகன், மஹிமா மகன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். SR கதிரின் ஓளப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி சூரியை வைத்து படகு போட்டியை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும்படியான வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
மதிப்பெண் 4/5
ராமநாதபுரம், கடல், பாய் மர படகுபோட்டி, நட்பு, காதல், துரோகம் , பழி வாங்கல் கலந்த கமர்சியல் கதை. சூரி நடிப்பு, உழைப்பு , மகிமா தோற்றம், நடிப்பு, கிளைமாக்ஸ், சூரிக்கு வெற்றி படம்
Comments
Post a Comment