#Immortal 4/5 ✅ gvprakashஅழகான ராட்சசி அவளிடம் சிக்கித் தவிக்கும் ஹீரோ 😍 கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை 'இம்மார்ட்டல்' பட விமர்சனம்
இம்மார்ட்டல் திரைவிமர்சனம்
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், மாறன் ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் இம்மார்ட்டல்.
கதை
வாடகைக்கு ரூம் தேடிக் கொண்டிருக்கும் பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மஹிக்கு (ஜி.வி. பிரகாஷ் குமார்) சிந்து (கயாடு லோஹர்) ரூம் ஷேர் செய்துக் கொள்ள விருப்பம் இருந்தால் வீட்டுக்கு வாங்க என காஸ்ட்லி அபார்ட்மெண்ட் ஃபிளாட்டுக்கு அழைக்கிறார். 5 ஆயிரத்துக்கு ரூம் பார்க்கும் மஹிக்கு ஜம்முன்னு சிந்துவுடன் ரூம் ஷேர் பண்ண கிடைத்த நிலையில், அவரும் அங்கேயே செட்டில் ஆகிறார்.
இந்த சூழ்நிலையில்
4000 வருஷமாக இளைஞர்கள் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் ரத்தக் காட்டேரி கயாடு லோஹர் என தெரியவர அவரிடம் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் ஜி.வி. பிரகாஷ் அவரிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் இம்மார்ட்டல் படத்தின் கதை
கதாநாயகனாக GV பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். கதாநயகியாக கயாடுலோகர்
அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். மாறன் ஆதித்யா கதிர் சிரிக்கவைக்கிறார்கள். TM கார்த்திக், குமார் நடராஜன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் சி எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ஜி.வி. பிரகாஷுக்கு நல்லதொரு ஹாரர் படமாக வெற்றி படமாக இம்மார்ட்டல் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர்மாரியப்பன் சின்னா.
PROAimTeam
மதிப்பெண் 4./5
Comments
Post a Comment