Im GameMovie Review Action சஸ்பென்ஸ், ஃபேண்டஸி கலந்த மெகா என்டர்டெய்னர் துல்கர் சல்மானின் "I Am Game" 4/5

I'm Game Movie Review 

மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படத்தை இயக்கிய நஹஸ் ஹிதயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் கயாடுலோகர், ஆண்டனி வர்கீஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்  i'm Game.
கதை

டேன் ஜான் (துல்கர் சல்மான்) அப்பா கம்பெனி வைத்துக் கொடுத்து ஓனராக அழகு பார்த்தாலும் சூதாட்ட மோகத்தால் கோடிக் கணக்கில் கடன் வாங்கி லூசராக சுற்றும் ஹீரோ ஒரு விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்துக்குப் பிறகு லூசராக இருந்த ஹீரோ மாஸ் காட்ட ஆரம்பிக்க, அதன் பின்னணியில் இருக்கும் ஒரு ஃபேண்டஸி விஷயம் ஹீரோவை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது. சூதாட்டம் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் அழிக்கிறது. அதிலும், கிரிக்கெட்டில் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டம் ஆன்லைன் பெட்டிங் ஆப் உள்ளிட்டவற்றை சுவாராஸ்யமாக சொல்வதே  படத்தின் கதை.
கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக கயாடு லோகர்கொடுத்த கதாபாத்திரததை சிறப்பாக செய்துள்ளார்.  வில்லனாக மிஷ்கின் நடிப்பில் மிரட்டியுள்ளார்.
கிரிக்கெட்டுக்காக உயிரையே கொடுக்கத் துணியும் விக்னேஷ் தாஸ் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் சிறப்பாக நடித்துள்ளார். கிரிக்கெட் கேப்டனாக  கதிர் நடிப்பும் அருமை.
சம்யுக்தா  விஸ்வநாதன் நடிப்பும் அருமை.
ஜிம்ஷி காலித் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஜேக்ஸ் பிஜாய் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
சூதாட்டம் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் அழிக்கிறது. அதிலும், கிரிக்கெட்டில் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டம் ஆன்லைன் பெட்டிங் ஆப் என கதையை எடுத்து எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொலாலியுள்ளார் இயக்குநர்  நவாஸ் ஹிதாயத். .: ImGameMovie
ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஃபேண்டஸி கலந்த மெகா என்டர்டெய்னர் துல்கர் சல்மானின் "I Am Game"!Movie
4/5 #YuvarajPRO

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie