கொடைக்கானலில் நடக்கும்புதிய படம் "நாற்கவி"கானா பாலா எழுதி பாடியுள்ளார்

கொடைக்கானலில் நடக்கும்
புதிய படம் "நாற்கவி"
கானா பாலா எழுதி பாடியுள்ளார்
( முழுக்க முழுக்க குற்றவியல் பின்னணி கொண்ட கதை)

கொடைக்கானலில் அடிக்கடி கொலைகள் நடக்கிறது. போலீஸ் விசாரணையில் ஒரு லாட்ஜில் வேலை செய்யும் உதவியாளர் ஒருவன் சிக்குகிறான். மேலும் விசாரிக்க இங்கு தங்கி உள்ள வெளிநாட்டினரும் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது. அவர்கள்  முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றனர். முடிவில் இக்கொலைகளில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இவ்வாறான குற்றப் பின்னணியுடன் கூடிய திடுக்கிடும் சம்பவங்களுடன் உருவாகும் படம் நாற்கவி. 
இப்படத்திற்கான பாடலை கானா பாலா எழுதி பாடியுள்ளார்.
எவன்டா அவன்டா அவன் டா 
நல்லவன் யாரும் இல்ல
நான் அடிச்சு சொல்லுவேன்... 
எனும் பாடல் பதிவானது 

கே.வி மீடியா தயாரிக்க அங்காடித்தெரு மகேஷ் நடித்த கருப்பு ஆடு எனும் படத்தை இயக்கிய விஜய் மோகன் நாற்கவி படத்தை இயக்குகிறார் 

கதையின் பாத்திரங்களாக சந்தனக்காசு எனும் குறும்படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்ற சதீஷூடன் பிரகதீஸ்வரன், திண்டுக்கல் தனம், நெப்பு சாமி, தலக்காவூர் கார்த்தி, "மைனா" வெங்கையா பாலன் போன்றோரும் நடிக்கின்றனர் 

ஒளிப்பதிவு-
எம்.கே.எஸ்-
மாத்தூர் கணேசன் - சாமி 

இசை- பி.வி.குமார் 
பாடல்கள்- கானா பாலா, கவியரசன் 

நடனம்- ஜாய்மதி
மக்கள் தொடர்பு-வெங்கட்

இணைத்தயாரிப்பு- பாலசுப்பிரமணியம், ஏ.வசந்த்,செல்வம்,
முருகேசன் 

தயாரிப்பு- கே.வி மீடியா 

கதை  திரைக்கதை வசனம்  இயக்கம்- விஜய் மோகன் 

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie