#Bethlehem Kudumba UnitMovieRevirw காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள்... நிவின் பாலி - மமிதா பைஜூவின் | ரேட்டிங்: 4/5
பெத்லஹேம் குடும்ப யூனிட் திரை விமர்சனம்
AD கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 4 ல் வெளியாகும் படம் பெத்லஹேம் குடும்ப யூனிட்
கதை
முண்டக்காயத்தில் வாழ்ந்துவந்த ஆஷ்லி (மமிதா பைஜூ), தனது மேற்படிப்பிற்காகத் பெற்றோர் மற்றும் தம்பியுடன் எர்ணாகுளத்தில் உள்ள கருகாட்டி பகுதிக்குக் குடிவருகிறாள். இவர் வீட்டுக்கு எதிரே குடி இருக்கும் ஜஸ்டின் (நிவின் பாலி) என்பவரை ஆஷ்லி பார்க்கிறாள். முப்பது வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் வாழும் ஜஸ்டின், அக்கம் பக்கத்தினருக்கு மிகவும் பிரியமானவர். சொந்தமாக கேட்டரிங் தொழில் நடத்திவருகிறார். அவர், தம்பி ஜோயல் (சங்கீத் பிரதாப்) உருவாக்கும் குறும்படங்களுக்கும் பக்கபலமாக இருக்கிறார். கடந்த கால காதலில் நேர்ந்த ஒரு துயரமான சம்பவத்திற்குப் பிறகு கல்யாணம் ஆகாமல் சுற்றியுள்ள அனைவருக்கும் உதவும் மனிதராக வலம் வருகிறார்.
தொடக்கத்தில் ஜஸ்டினை தவறாக புரிந்துகொண்ட ஆஷ்லி, பின்பு அவர்மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் இடையே 15 ஆண்டுகள் வரை வயது இடைவெளி இருக்கிறது.
இருவருக்குள்ளும் இருக்கும் இசை ஆர்வம் அவர்களை ஒன்று சேர்க்கிறது. ஆஷ்லி தன் அன்பை வெளிப்படுத்தும்போது, தனது வயது, ஊராரின் பேச்சு மற்றும் ஆஷ்லியின் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜஸ்டின் ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்து ஒதுங்கி விலகினாலும், அவளது உண்மையான அன்பைப் புரிந்து கொள்கிறான். காரில் செல்லும் ஒரு பயணத்தின் போது, ஆஷ்லி தன் காதலை வெளிப்படுத்த, ஜஸ்டினும் அதை ஏற்றுக்கொள்கிறான். பிறகு குடும்பத்தினருக்கும் காலனி மக்களுக்கும் தெரியாமல் இருவரும் ரகசியமாகக் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.இந்நிலையில், ஜஸ்டினின் தம்பி ஜோயலுக்கு அவனது காதலியின் சகோதரரால் பிரச்சனை வருகிறது. ஆஷ்லியின் மாமா அலெக்ஸ் (வினய் ஃபோர்ட்), ஆஷ்லியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து கண்காணிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில், இவர்களது ரகசியக் காதல் குடும்பத்தினருக்குத் தெரியவருகிறது. ஆஷ்லியின் தாய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி ஆஷ்லியை அயர்லாந்திற்குப் படிக்க அனுப்பி வைக்கிறார். ஜஸ்டினும் வயது வித்தியாசம் மற்றும் குடும்பச் சூழ்நிலை கருதி அமைதியாக, ஆஷ்லியும் அயர்லாந்துக்குச் சென்றுவிடுகிறாள்.இரண்டு ஆண்டுகள் கழித்து அயர்லாந்திலிருந்து திரும்பி வரும் ஆஷ்லி, ஜஸ்டின் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாக நினைக்கிறாள். ஆனால், அந்தத் திருமணம் ஜஸ்டினுடையது அல்ல, காலனியில் உள்ள வேறொருவரது திருமணம் என்பது தெரியவருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
நிவின் பாலி ஜஸ்டின் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆஷ்லி கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவியாக மமிதா பைஜு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
சங்கீத் பிரதாப்,
பிந்து பணிக்கர்,
சுரேஷ் கிருஷ்ணா,
வினய் ஃபோர்ட்,
ஸ்ரிந்தா,
ஷமீர் கான்,
மீனாட்சி ரவீந்திரன், கரிமுட்டம்,
தங்கம் மோகன்,
வெட்டுக்கிளி பிரகாஷ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
மொத்தத்தில் திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ள பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படம் குடும்பத்தோடு ரசித்து பார்க்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் AD கிரிஷ். பாராட்டுக்கள்.YuvarajPRO பெத்லஹேம்-குடும்ப-யூனிட்/
மதிப்பெண் 4/5
Comments
Post a Comment