#லெனின் பாணாடியன் திரைவிமர்சனம் 4/5 சமூக கருத்துள்ள ஒரு நிறைவான படம்
லெனின் பாணாடியன் திரைவிமர்சனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில்
தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
லெனின் பாண்டியன்.
கதை
மறுபுறம் மணல் கொள்ளைக் கும்பலால் தான் ஆசையாக வளர்த்த ஆட்டை இழந்த விவசாயி. மணல் கொள்ளை பற்றி புகார் கொடுக்க, இதனால் அவரது உயிருக்கு ஆபத்து வர, அவருடைய பாதுகாப்புக்காக ஒரு போலீஸ்காரரை நீதிமன்றம் அவருக்கு வழங்குகிறது. மணல் கொள்ளையர்களால் கங்கைஅமரனுக்கு ஆபத்து வந்ததா? இல்லையா? :கங்கை அமரனை உடன் இருக்கும் காவலர் காப்பாற்றினாரா? இல்லையா? முடிவில் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கதையின் நாயகனாக கங்கை அமரன் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக ரோஜா கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். காவலர் வேடத்தில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக ஆடுகளம் நரேன், யுகேந்திரன் நடிப்பில் மிரட்டியுள்ளார்கள். நீதிபதியாக ஜார்ஜ் மரியன் வரும் சீன்கள் தியேட்டரில் கைதட்டல்.
ஷ்ரீதா ராவ், போஸ் வெங்கட், அர்ச்சனா, சுப்பு பஞ்சு என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவும அருமை.
இயக்குநர் பாலச்சந்திரன்
இதில் அறிமுகம் ஆகும் கங்கை அமரன் நடிப்பு, தர்ஷன் நடிப்பு அருமை. கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் கலங்க வைக்கிறார் ரோஜா. நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியானை மறக்கவே முடியாது. போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், யுகேந்திரனும் மிரட்டி இருக்கிறார்கள்
மதிப்பெண் 4/5
Comments
Post a Comment