என்ன விலை திரைவிமர்சனம் மதிப்பெண் 4/5

என்ன விலை திரைவிமர்சனம்
சஜீவ் பாழூர் இயக்கத்தில் கருணாஸ், விஜயலட்சுமி நிமிஷா சஜயன், பூர்ணிமா பாக்யராஜ், பிரபு நிழல்கள் ரவி, மோகன் ராமன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் என்ன விலை.
இசை சாம் சி.எஸ்

கதை
 இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு எளிய மீனவர் கருணாஸ் (தவசி)  கடலில் மூழ்கி நாணயங்களை எடுத்து அதைவைத்து வாழ்க்கை நடத்துகிறார். அவருக்கு வேலைக்கு போகும் மனைவி, தங்கை, பள்ளிக்கு செல்லும் இரு பிள்ளைகள். கடலில் நாணயம் எடுக்கும்போது தங்கப்பதக்கம்
எதிர்பாராமல் கிடைக்க அதனால் ஏற்படும் சிக்கல்களையும், அவதூறுகளையும் சந்தித்து, சட்ட அமைப்பை எதிர்த்து தன் மானத்துக்காக நியாயம் கேட்டு போராடுவதே இந்த என்ன விலை படத்தின் கதை.
கதையின் நாயகனாக கருணாஸ் நடிப்பில் மிரட்டியுள்ளார். . கருணாஸ் அவார்டு கிடைக்கும். மனைவியாக விஜயலட்சுமி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கருணாஸ் தங்கையாக நடித்தவரும் பிள்ளைகளாக நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வழக்கறிஞராக நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்துள்ளார். 
பூர்ணிமா பாக்யராஜ், பிரபு நிழல்கள் ரவி, மோகன் ராமன், மொட்டை ராஜேந்திரன் சேரன்ராஜ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் சி. எஸ்ஸின் இசை படத்திற்கு பெரிய பலம். ஓளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். 
இயக்குநர் சஜுவ் பாழூர் ராமேஸ்வரம் பிண்ணனியில் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து அதை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 

மதிப்பெண் 4/5

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie