தி கிராண்ட் மாஸ்டர் திரை விமர்சனம். மதிப்பெண் 3.5/5
‘தி கிராண்ட் மாஸ்டர் திரைவிமர்சனம
மதிப்பெண் 3.5/5
V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றி செழியன் இயக்கத்தில்,
அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் மற்றும் பலர் நடித்து
தி கிராண்ட் மாஸ்டர்.
கதை
தூய்மை பணியாளராகவேலை செய்துகொண்டு வாழ்வாதாரத்திற்காக போராடும் தாய் (அபர்நதி) , தனது மகன் செஸ் (அஸ்வின்) விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். மகனின் ஆசையை தடுக்க நினைக்கிறார் சுரேஷ்மேனன். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் கதை
அபர்ணதி தூய்மைபணியாளராக தாயாக நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். செஸ் விளையாட்டில் ஜெயித்து கிராண்ட் மாஸ்டராக ஆகவேண்டும் என்று துடிக்கும் சிறுவனாக அஸ்வின் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். வில்லனாக
சுரேஷ் மேனன் நடிப்பில் மிரட்டியுள்ளார்.லிங்கேஸ், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு படத்திற்கு பலம். தினேஷ் ஆண்டனியின் இசை ரசிக்கவைக்கிறது.ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பு ஷார்ப்.
தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாக பேசும் படைப்பாக ஏல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றி செழியன்.
மதிப்பெண் 3.5/5
Comments
Post a Comment