’பேரன்பும் பெருங்கோபமும்’ - விமர்சனம்
தேனி மாவட்டம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்கவரான நாயகன் விஜித் ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார். இதே வேளையில் இரயிலில் அந்த ஒருவர் ஒரு கால் மட்டும் வெட்டபட்ட நிலையில் இருக்க இதை பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் மைம் கோபியின் சொந்த தொகுதியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போகிறது.
காணாமல் போன குழந்தை குறித்து போலீஸ் விசாரிக்கையில் நாயகன் விஜித மீது சந்தேகம் அடையும் போலீஸ் அவரை கைது செய்து விசாரிக்கையில் பல அதிர்ச்சி யூட்டும் தகவல் போலீசுக்கு கிடைக்கிறது.
இறுதியில் குழந்தை கடத்தல் வழக்கில் இருந்து நாயகன் விஜித் வெளியே வந்தாரா ? இல்லையா? இரயிலில் கொலை செய்யபப்பட்ட நபர் யார்? என்பதை போலீஸ் கண்டுபித்தார்களா? இல்லையா? என்பதே ’பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜித் இளைஞர் மற்றும் வயது முதியவர் என்ற இரண்டு வேடங்களில் வேறுபட்ட நடிப்பபை வழங்கியிருக்கிறார். காதல்,பாசம்,சண்டை என அனைத்ததிலும் சிறப்பான நடிப்பபை கொடுத்திருக்கிறார். தனது அறிமுக படத்திலேயே துணிச்சலான அதே நேரம் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பபை கொடுத்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் லோகு, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் ,கீதா கைலாசம், தீபா, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சாய் வினோத், பவா செல்லதுரை என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஜே.பி.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக உள்ளது.
குழந்தை கடத்தல் , சாதி அரசியல் , ஆணவப்படுகொலை ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவபிரகாஷ் இத்திரைப்படத்தில் சாதி வெறி என்பது ஒருவரது பிறப்பினால் வருவதில்லை, அவரது வளர்ப்பினால் மட்டுமே வருகிறது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
நடிகர்கள்: விஜித் பச்சன், ஷாலி கே நிவேகாஸ், மைம் கோபி, அருள் தாஸ், லோகு, விஜய் டிவி தீபா,. சுபத்ரா ராபர்ட், சாய் வினோத்
இசை: இளையராஜா
இயக்கம்: சிவபிரகாஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
Comments
Post a Comment