’ப்ளடி பெக்கர்’  - விமர்சனம்
நாயகன் கவின். தனக்கு கண் பார்வை தெரியாது, காது கேட்காது என மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். கவினுக்கு  எப்படியாவது மாளிகையில் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது.  இந்நிலையில் நடிகர் ஒருவர் தன்னுடைய மாளிகையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் போடுகிறார்.

இந்த விருந்தில் கவினும் கலந்து கொள்கிறார். அந்த ஆடம்பர மாளிகையில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக  உள்ளே போக, அங்கு ஒரு வில்லங்கத்தில் மாட்டிக் கொள்கிறார்.  அந்த மாளிகையின் வாரிசுகள் சொத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ளும் நோக்கத்தோடு மாளிகைக்குள் நுழைகிறார்கள்.
அந்த வாரிசுகளின் அப்பாவுக்கு இன்னொரு வாரிசு இருக்கிறது. அந்த வாரிசுக்கே தனது சொத்தின் பெரும்பகுதியை உயில் எழுதி வைத்திருக்கிறார் உண்மையான வாரிசான ரெடின் கிங்ஸ்லியை ஒரு கும்பல் கொலை செய்து விடுகிறது போலியான  வாரிசாக  கவினை  நடிக்க வைத்து சொந்த்துக்களை அடைய அந்த கும்பல்  திட்டம் போடுகிறார்கள். அதற்கு குடும்ப வழக்கறிஞரும் உதவுகிறார்.
ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு கவின் நடிக்கிறான் என்பது தெரிய வருகிறது.  இதனையடுத்து  கவினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இறுதியில் கவின் அந்த மாளிகையில் இருந்து உயிருடன் வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே  ’ப்ளடி பெக்கர்’  படத்தின் கதை.
பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவின் பரட்டைத்தலை, அழுக்கு உடை என அடையாளமே தெரியாத வகையில் அசல் பிச்சைக்காரனை பார்ப்பதை போலவே தோற்றத்தில் வருகிறார். மனைவி பிரிவு , மகன் பாசம், எதிரிகளை அடித்து நெறுக்குவது  என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
மாளிகையின் உண்மையான வாரிசாக வரும் ரெடின் கிங்ஸ்லி  வரும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி வரும் நகைச்சுவை காட்சிகள் பாராட்டும் வகையில் உள்ளது. மாருதி பிரகாஷ்ராஜ், சுனில், கார்த்திக், அக்‌ஷயா ஹரிஹரன் மற்றும் பிரியதர்ஷினி  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் பாடல் கேட்கும் ரகம்  பின்னணி இசை படத்திற்கு மிகப்பிரிய பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுஜித் சரங். ஒளிப்பதிவு மாளிகையின் அழகையும் ஆபத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு பிச்சைக்காரன் மாளிகைக்கு செல்வதால் வரும் ஆபத்தை மையமாக வைத்து நகைசுவை திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்  அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்  சில இடங்களில் அது பாராட்ட பெற்றிருந்தாலும் பல  இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது  காமெடி, த்ரில்லர் என்றாலும் பிளாஷ்பேக் காட்சியில் செண்டிமெண்ட் ஒர்க் அவுட்  ஆகி  இருக்கிறது.
நடிகர்கள் : கவின் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன், பிரியதர்ஷினி

இசை : ஜென் மார்டின்

இயக்கம் : சிவபாலன் முத்துக்குமார்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்

Comments

Popular posts from this blog